It is on the right side of the road from Cumbum Puduppatti to Uthamapalayam.
worship
3–3.5 feet height, 2 feet wide
Village Name
K. Pudupatti
District
Theni
காலம் / அரசன்
பொது ஆண்டு 14-15 ஆம் நூற்றாண்டு.
கூடுதல் விவரங்கள்
இவ்வளாகத்தில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வலப்புறம் உள்ள வழிபாட்டுத் தூண் கல், நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கீழடுக்கில் காணப்படும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து கொண்டு தன் வலக்கையில் வாளை பிடித்தவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். குதிரையின் முன்பு ஒரு பெண் நிற்கிறார். குதிரையின் பின்னால், குடை பிடித்தபடி ஒர் ஆண் நிற்கிறார். இதற்கு மேல் உள்ள அடுக்கில் இரு வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி நிற்கின்றனர். இதற்கு மேல் உள்ள அடுக்கில் வீரன் ஒருவன் இரு காளைகளைப் பிடித்து நின்றபடி காட்சி அமைந்துள்ளது. மேலடுக்கில் சிவலிங்கமும் அதன் இருபக்கங்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிபாட்டுத் தூண் கல்லில் காணப்படும் காட்சிகள் ஆநிரைக் கவர்தல் மற்றும் மீட்டல் போன்ற வழக்கங்களைக் குறிப்பதாக இருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளின் பொழுது இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகற்கள் அமைத்து அதை ஊர்மக்கள் வழிபட்டு வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இடப்புறம் உள்ள புடைப்புச் சிற்பத்தில் காணப்படும் வீரன், தன் வலக்கையில் வாளும் இடக்கையில் துப்பாக்கியும் பிடித்துள்ளான். இவன் தலையில் கொண்டையுடன், கைவளை, கடகவளை போன்ற ஆபரணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான. இந்நடுகல்லில் காணப்படும் வீரன் ஊர் காவலன் அல்லது விவசாய நிலங்களை பாதுகாத்த வீரனாக இருக்கலாம். இவன் இப்பகுதியில் வாழ்ந்த ஒரு போர் வீரனாகவும் இருக்கலாம்.
Period / King
Common Era 14th–15th century
Additional Information
In this site, two relief sculptures are observed. The worship pillar stone on the right side is divided into four tiers.
In the lowest tier, a warrior is shown seated on a horse, holding a sword in his right hand. A woman stands in front of the horse, and behind the horse, a man is shown holding an umbrella. In the tier above, two warriors are depicted standing, holding weapons. In the next tier, a warrior is shown standing, holding two bulls. In the top tier, a Shiva lingam is depicted with the Sun and the Moon on its sides.
The scenes on this worship pillar stone may refer to practices such as Aaniraik Kavarthal and Meettal. It is believed that hero stones were erected for warriors who died during such events, and the villagers worshipped them.In the relief sculpture on the left side, the warrior is depicted holding a sword in his right hand and a gun in his left hand. He is adorned with a hair knot, armlets, and bracelets. The warrior on this hero stone may have been a village guardian or a protector of agricultural lands. He could also have been a warrior who lived in this region.