Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

துப்பாக்கி வீரன் நடுகல்

Memorial stone for a man wielding a gun

அமைவிடம்

சந்தைத்தெரு அருகே உள்ள தனிநபர் விவசாய நிலத்தில் உள்ளது.


வழிபாடு

இல்லை


காலம் / அரசன்

பொது ஆண்டு 15 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.


ஊர்

தேவாரம்

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல்லில் காணப்படும் வீரன், தன் வலக்கையில் வாளும் இடக்கையில் துப்பாக்கியும் பிடித்துள்ளான். இவர் தலையில் கொண்டையுடன், கைவளை, கடகவளை, மாலை போன்ற ஆபரணங்களுடன் அழகாக புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். வீரனின் இருபுறமும் அவர் இரு மனைவியர் நிற்கின்றனர். இது, வீர மரணம் அடைந்த ஒருவனின் நினைவாகவும், அதன் காரணமாக அவர் மனைவியர் மேற்கொண்ட சதி என்னும் உடன்கட்டை ஏறிய நிகழ்வின் நினைவாகவும் எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அளவு
5 உயரம் அடி, 1.5 அடி அகலம்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம. ரேவன்

ம. ரேவன்