Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குதிரை வீரன் நடுகல்

Horse-mounted Warrior's Hero Stone

அமைவிடம்

முதலைக்குளம் மந்தையின் வடக்குப் பக்கம் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

வரலாற்றுக் காலம்


ஊர்

முதலைக்குளம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இந்நடுகல் முதலைக்குளம் மந்தையின் வடக்குப் பக்கமாக மண்ணுக்குள் புதைந்த நிலையில் உள்ளது. இந்த நடுகல்லில் புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ள ஆண் ஒரு குதிரையின் மேல் அமர்ந்துகொண்டு, தன் வலக்கையில் வாள் ஏந்தியபடியும் இடக்கையால் குதிரையின் கடிவாளததைப் பிடித்தபடியும் உள்ளான். குதிரை தன் முன்னங்கால்களை உயர்த்தியவாறு நின்று கொண்டிருக்கிறது. குதிரையின் கீழே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் நின்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடுகல் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. குதிரையின் கழுத்திலும் அணிகலன்கள் உள்ளன.
அளவு
உயரம் 3.1 அடி, அகலம் 3.7 அடி
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ந. இரத்தினக்குமார்

ந. இரத்தினக்குமார்