Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஆசிரியர் நடுகல்

Memorial stone for a Teacher

அமைவிடம்

வாகைகுளத்திலிருந்து திடியன் செல்லும் வழியில் அரசு பள்ளியைக் கடந்து முத்தையா கோயில் அருகில் அமைந்துள்ளது.


வழிபாடு

ஆம்


கதை

இந்த நடுகல் ஆசிரியருக்கு மாணவர்கள் எடுத்த நடுகல் ஆகும். நடுக்கல் சிற்பத்தில் காணப்படும் திரு. பாக்கியநாதன் என்பவர் ஆங்கிலேயர் காலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார். பாக்கியநாதன் இயற்கையாக மரணமடைந்த பின்னர், அவரது புதல்வன் ராமசாமியும் அவரது மாணவர்களும் இணைந்து ஒரு நடுகல்லை எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இதுபோன்ற நடுகற்கள் மிகவும் அரியது.


ஊர்

பெரிய வாகைக்குளம்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த நடுகல், ஒரு கல் மேடை மற்றும் கல் மண்டபத்தினுள்ள அமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல்லில் இயற்கை எய்திய ஆசிரியர் பாக்கியநாதனும் அவரது மனைவியும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளனர். நடுகல்லின் இடது பக்கம் உள்ள ஆசிரியர் தன் வலக்கையை சூச்சி முத்திரையில் வைத்துள்ளார். இடப்பக்கம் உள்ள மனைவி தன் இரு கரங்களையும் கூப்பி நின்றுள்ளார். நடுக்கலின் மேல் பகுதியில் பாக்கியநாதன் என்ற ஆசிரியர் பெயரும், ’மனைவி’, ’ஆசிரியர்’ போன்ற சொற்களும் வெட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேல் பகுதியிலும், நடுக்கல்லின் மேல் பகுதியிலும் சிலுவை சின்னம் காணப்படுகிறது. தற்போது இந்த நடுகல்லை இவரது குடும்பத்தினர் மட்டுமே வழிபட்டு வருகின்றன.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ஆய்வாளர் அருண் குமார்

ஆய்வாளர் அருண் குமார்

ஆய்வாளர் அருண் குமார்