Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வழிபாட்டுத் தூண் கல்

Worship Pillar

அமைவிடம்

வளையபட்டி ஊருக்கு தென்புறம் அமைந்துள்ளது.


அளவு

சுமார் 6 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட கனசதுர கல்.


வழிபாடு

ஆம்


ஊர்

வளையபட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இவ்வழிபாட்டுத் தூண் கல்லின் நான்கு புறமும் ஆறு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பக்கமும் உள்ள அடுக்குகளில் பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வேணுகோபாலர் ஆநிரைகள் மத்தியில் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சி, மனிதன் ஒருவன் நீளமான ஆயுதத்தால் பன்றி போன்ற விலங்கை தாக்கும் காட்சி, வில், ஈட்டி மற்றும் மலர்கள் எந்திய பெண்கள் வரிசையாக நிற்கும் காட்சி, மாடுகள் சண்டையிடும் காட்சி, ஆயுதமேந்திய ஆண்கள் சண்டையிடும் காட்சி, கண்ணப்ப நாயனார் கதையை நினைவூட்டும் வகையில் சிவலிங்கத்தின் மேல் தன் காலை பதித்தவாறு நிற்கும் மனிதன், நாக சிற்பங்கள், யானைகள் சண்டையிடும் காட்சி, மற்றும் பிற நிகழ்வுகளும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

தூணின் மேல்பகுதி, கோவில் விமானத்தின் மேலடுக்கில் காணப்படும் சிகரம் மற்றும் கலசம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்கைச் சுற்றியும் வடிவியல் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வழிபாட்டுத் தூண் கல்லில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் மனித உருவங்கள் மற்றும் கால்நடைச் சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

முனைவர் மு.கீதா

முனைவர் மு.கீதா

முனைவர் மு.கீதா

முனைவர் மு.கீதா

முனைவர் மு.கீதா

காணொலி

முனைவர் மு.கீதா