Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

விநாயகர் சிற்பம்

Sculpture of god Vinayaka

அமைவிடம்

இவ்வூர் பெருமாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.


அளவு

3 அடி உயரம்.


வழிபாடு

வழிபாட்டில் உள்ளது.


ஊர்

ஆமூர்

மாவட்டம்

மதுரை

கதை
இவை மாலிக்காபூர் படையெடுப்பின் போது சிதைவுற்ற சிற்பங்கள் என இப்பகுதி மக்களால் சொல்லப்படுகின்றன.
கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு-13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கூடுதல் விவரங்கள்
இவ்விடத்தில் இரண்டு கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இடது பக்கத்தில் நாகர் புடைப்புச் சிற்பமும் வலது பக்கத்தில் விநாயகர் சிலையும் காணப்படுகின்றன. நான்கு கரங்கள் கொண்ட இவ்விநாயகர் தன் வலது பின் கையில் அங்குசம் பிடித்துள்ளார், மற்றும் தலையில் மகுடம் அணிந்துள்ளார். இச்சிற்பங்கள் பலகாலமாக வழிபாட்டில் இருந்துவந்த காரணத்தினால் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்