Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

ஊரணிக்கும் சமயக்கருப்பு கோயிலுக்கும் இடையில் உள்ள சாலை ஓரம் உள்ளது.


அளவு

உயரம் 3.7 அடி, அகலம் 2 அடி.


வழிபாடு

ஆடு பலியிட்டு, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.


ஊர்

எருமார்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. காரான், காராத்தி என்ற கணவன், மனைவி இராமநாதபுரம் கடலாடி கிராமத்தை விட்டு இராஜக்காப்பட்டியில் வந்து குடியேறினர். குடியேறிய ஊரில் கண்மாய் மடையை பராமரிக்கும் வேலையை செய்து வந்தனர். ஒரு சமயம் மழைக்காலத்தில், மடை உடையும் நிலை ஏற்பட்டதால் அதை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இறந்து விடுகின்றனர்.

ஊரின் நன்மைக்காக உயிர் நீத்த இவ்விருவருக்கும் சமயக்கருப்பு கோயில் அருகில் இந்த நடுகல் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 15-16 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இது காரான், காராத்தி என்ற கணவன், மனைவி இருவருக்கும் எடுக்கப்பட்ட நடுகல் புடைப்புச் சிற்பமாகும். இவ்விருவரும் கைகூப்பி நின்றுள்ளனர். அணிகலன்கள் மற்றும் கொண்டை அணிந்துள்ள இவர்களுக்கு நீள் காதுகள் உள்ளன. நடுகல்லின் மேல் பகுதியில் அலங்கார வடிவங்கள் வெட்டப்பட்டுள்ளது. தற்போது சமயக்கருப்பு கோயிலுள்ள இடத்தை காரான் தோப்பு என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர்.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 74.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்