Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

கண்ணுடையார் புறத்திற்கும் குருபகவான் கோயிலுக்கும் இடையில், வைகை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.


வழிபாடு

வழிபாட்டில் உள்ளது


காலம் / அரசன்

வரலாற்றுக் காலம்


ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
அகலமான கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கீழடுக்கில் இரண்டு பெண்களுக்கு நடுவில் ஓர் ஆண் நின்றபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். இவ்விரு பெண்கள் நடுக்கல்லில் காணப்படும் ஆணின் மனைவியராக இருக்க வாய்ப்புள்ளது. இம்மூவரும் தலையில் கொண்டை அணிந்துள்ளனர். நடுவில் உள்ள ஆணின் இடதுகை பக்கம், ஒரு குழந்தை நிற்பது போல் தெரிகிறது. இச்சிறுவனுக்கு அருகில் நிற்கும் பெண் தன் கையில் ஏதோ ஒரு பொருளை ஏந்தி உள்ளார். நடுகல்லின் மேலடுக்கில் ஓர் ஆண் மற்றும் இரண்டு பெண்கள் சுகாசனம் அமர்வில் (ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டபடி) அமர்ந்துள்ளனர்.

சிற்பத்தின் கீழ் அடுக்கில் காணப்படும் இவர்கள் ஏதேனும் வீர செயல்புரிந்து இறந்திருக்க வேண்டும். எனவே, அவர்களின் நினைவாக இந்நடுகல் எழுப்பப்படடிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. மேலும், இவர்கள் பூலோகத்தை விட்டு மேல் லோகம் சென்று விட்டதைக் காட்டும் விதமாக நடுக்கல்லின் மேல் அடுக்கில், அமர்ந்த நிலையில் இவர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. சிற்ப அமைதியின் அடிப்படையில், இது பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல்லாக/ நினைவுக்கல்லாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது ஊர் மக்கள் இதை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி