Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகற்கள்

Hero stones

அமைவிடம்

சிற்பம் 1) தெற்கு கண்மாய் கரையிலுள்ள சிறிய குன்றில் கருப்பசாமி பட்டவன் கோயிலில் உள்ளது. சிற்பம் 2) தனியாக மேற்கு கண்மாய் கரையில் அமைந்துள்ளது.


அளவு

சிற்பம் 1) உயரம் 4 அடி, அகலம் 3.9அடி

சிற்பம் 2) உயரம் 3 அடி, அகலம் 2.4 அடி


கதை

சிற்பம் 1) முதல் நடுகல் புடைப்பு சிற்பத்தில் காணப்படும் நால்வரும் முஸ்ராம் படைகளுடன் போரிட்டு இறந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் போருக்குச் சென்று வரலாறு முழுமையாக கிடைக்கவில்லை.நடுகல்லின் இடப்புறம் இருப்பவர்கள் பெரிய சிவனாண்டித்தேவர் மற்றும் அவரது மனைவி ஆகும். வலப்புறம் சின்ன சிவனாண்டித் தேவர் மற்றும் அவரது மனைவி அம்மியக்காள் உள்ளனர்.

சிற்பம் 2) நடுகல்லில் உள்ள ஆணின் பெயர் மாயாண்டித் தேவர், அவரது மனைவியின் பெயர் கருப்பாயி அம்மாள் ஆகும்.


ஊர்

மேல உரப்பனூர்

மாவட்டம்

மதுரை

கல்வெட்டுகள்
இல்லை
காலம் / அரசன்
பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
சிற்பம் 1)இந்நடுகல் புடைப்பு சிற்பத்தில் நான்கு நபர்கள் உள்ளனர். நடுவில் இரண்டு ஆண்களும் இரு முனைகளிலும் இரு பெண்களும் காணப்படுகின்றனர். சிற்பத்தில் இடப்புறமுள்ள ஆண், தன் வலக்கையில் ஈட்டியும் இடக்கையால் இடுப்பில் உள்ள வளரி போன்ற ஆயுதத்தைப் பிடித்த படியும் நின்றுள்ளான்.

வலப்புறம் உள்ளான் தன் வலக்கையில் வாளும் இடக்கையில் கேடயம் பிடித்தவாறு நின்றுள்ளான். இவர்களின் மனைவியர் தங்கள் ஒரு கையில் பூச்செண்டும் மறுகையில் குடுவை போன்ற ஒரு பொருளையும் ஏந்தியுள்ளனர். சிற்பத்தின் கீழ் நடுபகுதியில் ஒரு நாய் போன்ற உருவமும் காணப்படுகிறது.

சிற்பம் 2)இந்த நடுகல் புடைப்புச் சிற்பத்தின் இடப்பக்கம் உள்ள பெண் தன் வலக்கையில் பூச்செண்டு பிடித்த படியும் இடப்பக்க இடுப்பில் குழந்தையை ஏந்திய படியும் நின்றுள்ளார். நடுகல்லின் வலப்பக்கம் உள்ள இவரது கணவர், தன் வலக்கையில் ஈட்டி போன்ற ஆயுதத்தையும் இடக்கையால் இடுப்பில் உள்ள வளரியையும் பிடித்தபடி நின்றுள்ளார். இந்நடுகல்லுக்கு கோட்டம் போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 44-45.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்