Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சீலைக்காரி நடுகல்

Seelaikari Hero Stone

அமைவிடம்

குண்டாற்றின் வடகறையில் உள்ள சீலைக்காரி கோயிலில் உள்ளது.


வழிபாடு

தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.


காலம் / அரசன்

பொது ஆண்டு 16 ஆம் நூற்றாண்டு


ஊர்

கிழவனேரி

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
நடுகல் புடைப்புச் சிற்பத்தில் வலப்பக்கம் காணப்படும் ஆண் தன் வலக்கையில் வாளும், இடது இடுப்பில் உரையில் நீண்ட வாளும் வைத்தவாறு காட்சிபடுத்தப்பட்டுள்ளான். சிற்பத்தின் இடப்பக்கம் உள்ள பெண் தன் இடுப்பில் ஒரு குழந்தையை சுமந்தபடி நின்றுள்ளார். இவர்கள் இருவரும் கொண்டையிட்டு அணிகலன்கள் அணிந்துள்ளனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம். இந்நடுகல்லை சார்ந்த செவிவழி கதை ஏதும் கிடைக்கவில்லை. இந்நடுகல்லை ஊர்மக்கள் சிலர் 'சீலைக்காரி' என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
அளவு
உயரம் 3 அடி, அகலம் 1.9 அடி
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 91-92.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்