Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பட்டவன் சாமி நடுகல்

Pattavan Sami Hero Stone

அமைவிடம்

குப்பணம்பட்டி கிராமத்தின் மேற்குபக்கமுள்ள கால்வாய் அருகில் இடதுபுறம் அமைந்துள்ளது.


அளவு

உயரம் 3.11 அடி, அகலம் 2.6 அடி


வழிபாடு

தை மாதத்தில் வரும் முக்கிய நாள்கள், சிவராத்திரி மற்றும் வம்சாவளிகளுக்கு ஏற்ற முக்கிய நாள்களிலும் நடுகல்லுக்கு வெள்ளாடை (கொசவம்) உடுத்தி, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.


ஊர்

குப்பணம்பட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. பலகாலம் முன்பு, இவ்வூரில் விருமத்தேவன் மற்றும் அவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. படைவெட்டு காலத்தில் ஒரு சமயம், முஸ்ராம் படைகள் வைகை ஆற்றை நெருங்க உள்ளன என்ற தகவல் அறிந்ததை அடுத்து, விருமத்தேவன் 'நானும் போருக்கு போகிறேன். நான் 10 நாட்களுக்குள் வீடு திரும்பவில்லை என்றால், நான் போரில் வீர மரணம் அடைந்ததாக எண்ணி எனக்கு ஒரு நடுகல் சிலை அமைத்து வையுங்கள்' என்று சொல்லிவிட்டு போருக்கு கிளம்பியாதாக சொல்லப்படுகிறது.

விரும்பத் தேவன் முதஸ்ராம் படைவீரர்கள் பலரை வெட்டி சாய்த்தாராம். போர்க்களத்தில் ஒரு கள்ளிச் செடியின் பின் ஒளிந்து கொண்டிருந்த எதிரி ஒருவன் விருமத்தேவனை ஈட்டியால் தாக்கி காயப்படுத்தினார். வலியில் துடித்த விரும்த்தேவனால் நகர முடியவில்லை. தண்ணீர் தாகம் எடுத்த போது இவர் தன் இரத்தத்தையே குடித்து இரண்டு நாட்கள் வரை உயிர் வாழ்ந்து, பின் இறந்ததாக செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன. பல நாட்களாகியும் போருக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் பெற்றோர் இவன் நினைவாக இந்த நடுகல்லை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவரது வம்சாவளிகள் இந்நடுகல்லை வழிபட்டு வருகின்றனர்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
நடுகல் புடைப்புச் சிற்பத்தில் காணப்படும் ஆண், தன் இடக்கையில் ஈட்டி பிடித்த படியும், வலக்கையால் இடுப்பில் உள்ள வளரியை பிடித்த படியும் நின்றுள்ளான். பல அணிகலன்கள் அணிந்துள்ள இவ்விரன் தன் இடுப்பில் குருவாள் வைத்துள்ளான். வீரனின் இடப்பக்கம் கீழ்ப்பகுதியில் கை கூப்பியபடி நின்ற நபரின் சிறிய உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

நடுகளின் மேல் பகுதியில் கீர்த்தி முகமும் அலங்கார வடிவமைப்புகளும் காட்டப்பட்டுள்ளன. நடுகல்லில் காணப்படும் இருவரும் கொண்டை அணிந்து, நீள் காதுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 27.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்