Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

நெடுஞ்சாலையின் வடக்குப்புறம் விநாயகர் கோயில் அருகில் உள்ளது.


அளவு

உயரம் 3 அடி, அகலம் 2.34 அடி


வழிபாடு

தை முதல் நாள், நடுகல்லுக்கு வேட்டி கட்டி, பொங்கல் வைத்து, விளக்கு, பத்தி மற்றும் சூடம் ஏற்றி, தேங்காய் மற்றும் பல படையல்களை வைத்து வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது கோடாங்கி வைத்து வெறியாட்டம் ஆடப்படுகிறது.


ஊர்

மூணான்டிபட்டி

மாவட்டம்

மதுரை

கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் தனக்கன்குளம் கிராமத்தை சில எதிரி படைகள் தாக்கிய போது, ஊர் மக்களை காக்க அவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த ஒருவருக்காக இந்நடுகல் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவரது குதிரை இவர் உடலை, இறந்த இடத்தில் இருந்து ஊருக்கு சுமந்து கொண்டு வந்து சேர்த்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 14-15 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
நடுகல் புடைப்புச் சிற்பத்தின் நடுப்பகுதியில் காணப்படும் ஆண், தன் வலக்கையில் வாளை உயர்த்தி பிடித்தபடியும், இடக்கையில் வளரி பிடித்தபடி காட்சிபடுத்தப்பட்டுள்ளான். இவ்வீரன் தன் இடுப்பில் குறுவாள் வைத்துள்ளான். இவன் இரு புறங்களிலும் இவனது மனைவியர் காணப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வலக்கையில் பூச்செண்டும், இடக்கையில் குடுவை போன்ற பொருளையும் ஏந்தியுள்ளனர். இம்மூவரும் பல அணிகலன்கள் அணிந்துள்ளனர்.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 54-55.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்