Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இளந்திரை இராசாவின் இளைய மகன் கதை

Story of the youngest son of the Ilanthirai Raja

கதைச் சொல்லியின் விவரம்

இந்த வாய்மொழிக் கதையை கூறும் ராமாயி பாட்டிக்கு 80 வயது ஆகிறது. இவர் புராண கதைகள், கிராமப்புற தெய்வ கதைகள், ராஜா கதைகள் என்ன பல வகை நாட்டுப்புற கதைகளை வாய்மொழியாக கற்றுக்கொண்டு, நினைவு வைத்த ஊரில் உள்ள மக்களுக்கும் சிறுவர்களுக்கும் கூறுகிறார்.


கதை வடிவம்

வாய்மொழி


கூடுதல் விவரங்கள்

நாட்டுப்புறக் கதைகள் என்பவை வாய்வழியாக பல தலைமுறைகளாக மக்களால் சொல்லப்பட்டு வரும் மரபுக் கதைகள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது சமூகத்தால் பகிரப்படும் இலக்கிய வடிவங்கள், அவற்றில் பழமொழிகள், புராணங்கள், நகைச்சுவைகள், கவிதைகள் மற்றும் இதர வாய்மொழிக் கதைகளும் அடங்கும்.

கேட்பொலி கோப்பில் சொல்லப்பட்டுள்ள கதை பின்வருமாறு:

முன்னொரு காலத்தில் இளந்திரை இராசா என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆறு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். ஆறு ஆண் பிள்ளைகளுள் ஐவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இளந்திரை இராசாவின் இளைய மகனுக்கு மட்டும் திருமணம் ஆகாவில்லை. அச்சமயம் இளந்திரை இராசாவும் அவர் மனைவியும் இறந்து விடுகின்றனர்.

எனவே, அண்ணன்கள் ஐந்து பேரும் இளையவனை (இளந்திரை இராசாவின் இளைய மகனை) நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு தங்கள் மனைவியரிடம் கேட்டுக் கொள்கின்றனர். அண்ணன்கள் அனைவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அவர்களின் மனைவியர், இளையவனுக்கு சரியாக உணவளிக்காததால், அவன் வீட்டை விட்டு சென்று விடுகிறான். பின்னர் தன் குதிரையை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வரும் பொழுது, காசி இராசா என்பவறின் மகளை சந்தித்து, பல போராட்டங்களுக்குப் பின் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். இதுவே இளந்திரை இராசாவின் இளைய மகனின் கதையாகும்.

முழுமையான கதை கேட்பொலி கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது (kindly refer the audio file).


ஊர்

தோடனேரி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மகாலிங்கம்

காணொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

கேட்பொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி