Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மகளின் பெயர் விளக்கமாறு

The daughter whose name is 'Broomstick'

கதைச் சொல்லியின் விவரம்

இந்த வாய்மொழிக் கதையை கூறுபவர்கள் ஆயம்மாள் (65 வயது) மற்றும் முனியம்மாள் (70 வயது) என்ற இரு பெண்கள் ஆவர். இவ்வூரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல நாட்டுப்புறக் கதைகளை தெரிந்துவைத்துள்ளனர்.


கதை வடிவம்

வாய்மொழி


கூடுதல் விவரங்கள்

நாட்டுப்புறக் கதைகள் என்பவை வாய்வழியாக பல தலைமுறைகளாக மக்களால் சொல்லப்பட்டு வரும் மரபுக் கதைகள் ஆகும். இவை ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது சமூகத்தால் பகிரப்படும் இலக்கிய வடிவங்கள், அவற்றில் பழமொழிகள், புராணங்கள், நகைச்சுவைகள், கவிதைகள் மற்றும் இதர வாய்மொழிக் கதைகளும் அடங்கும்.

கேட்பொலி கோப்பில் சொல்லப்பட்டுள்ள கதை பின்வருமாறு:

ஒரு ஊரில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத் தலைவரின் பெயர் சர்க்கரை. அவரது மனைவியின் பெயர் பழம். அவர்களின் மகள் பெயர் விளக்கமாறு. அவர்கள் வீட்டு நாயின் பெயர் குடுமி. மேலும் அவர்கள் வீட்டு மாட்டின் பெயர் விருந்தாளி என்பதாகும்.

ஒரு சமயம் அவ்வீட்டிற்கு பெண் பார்ப்பதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அப்பொழுது அவர்கள் வீடு பூட்டி இருந்து. பக்கத்துவீட்டுக்காரர்களிடம் வினவியபோது, சர்க்கரையும் பழமும் தோட்டத்திற்கு சென்று இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார்கள் எனவும் தெரிவித்தனர். இச்செய்தி அவ்விருந்தாளிக்கு குழப்பத்தை அளித்தது.

அச்சமயம் அவ்வீட்டு மாடு அவ்வழியே சென்றுள்ளது. அதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், 'விருந்தாளியை பிடித்து கட்டுங்கள்' என்று கூறினர். இதைக் கேட்ட அந்த பெண் பார்ப்பதற்காக வந்திருந்த நபர், அவர்கள் தன்னைப் பிடித்து கட்ட சொல்வதாக நினைத்துக் கொண்டு அதிர்ச்சி அடைந்தார். அச்சமயம் வீட்டு சொந்தக்காரர்கள் (சர்க்கரை, பழம் மற்றும் விளக்கமாறு) அனைவரும் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டிற்கு பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையை உபசரித்து சாப்பிடுமாறு அழைத்தனர்.

மாப்பிள்ளைக்கு அவர்கள் மிக அதிக உணவு அளித்து நன்கு கவனித்துக் கொண்டனர். ஆனால் அவ்வளவு உணவை தன்னால் சாப்பிட முடியாது என மாப்பிள்ளை குறை கூறியதும், 'முடிந்தால் சாப்பிடுங்கள் இல்லையெனில் விளக்கமாறு உள்ளது' என்று அவர்கள் பதில் அளித்தனர். இதைக் கேட்ட மாப்பிள்ளை உணவை முழுமையாக உண்ணாவிடில் விளக்கமாற்றால் தன்னை அவர்கள் அடிப்பார்கள் என புரிந்து கொண்டு பயந்து ஓடத் தொடங்கினார்.

ஓடும் மாப்பிள்ளை அவ்வீட்டு நாய் துரத்தத் தொடங்கியது. அதைக் கண்ட அவ்வீட்டு நபர்கள், ' குடுமியை பிடி; குடுமியை பிடி' என்று சத்தம் போட்டுனர். இதைக் கேட்ட மாப்பிள்ளை இன்னும் வேகமாக ஓட்டம் எடுத்தார்.

இதுவே ' மகளின் பெயர் விளக்கமாறு' என்ற நகைச்சுவையான கதை. முழுமையான கதை கேட்பொலி கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது (kindly refer the audio file).


ஊர்

மேலமாத்தூர்

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி

கேட்பொலி

M. ராஜேஸ்வரி