Saalimarathadi Sivan (refers to god Shiva enshrined under a Saal tree)
Name of other deities
Aadhi sivan/ Primordial Shiva
Significance of the temple
The cattle dedicated to the deity (referred to as 'Saami Maadu') is the main object of worship in this temple.
Village Name
Thenkalpatti
District
Madurai
மூலவர் பெயர்
சாலிமரத்தண்டு
தல மரம்
சாலிமரம்
கோயில் குளம்/ஆறு
கிணறு
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி, தை மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மாட்டுக்குத் தீபம் காட்டுதல், புத்தாடை அணிவித்தல்
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
கோயில் அமைப்பு
பெரிய பீடம் ஒன்றில் சாலிமரத்தைக் குறிக்கும் விதமாக ஒரு தூண் உள்ளது.
சுருக்கம்
ஆதிசிவன் கோயிலுக்கு நேர்த்திக்கடனாகச் சல்லிக்கட்டுக் காளைகள் நேர்ந்துவிடப்படுகின்றன. வேண்டுதல் நிறைவேற யார் வேண்டுமானாலும் ஆதிசிவனை வணங்கிக் காளையை நேர்ந்துவிடலாம். அப்படி விடப்படும் மாடுகள் தேன்கல்பட்டியில் உள்ள சாலிமரத்தின் அருகில் பராமரிக்கப்படுகின்றன. இதைப் பராமரிப்பதற்கு மானியம் உண்டு. மாடுகள் நீர் அருந்த அருகிலே ஒரு கிணறு வெட்டப்பட்டுள்ளது. வேப்பமரங்கள் சூழச் சாவடியும் கட்டப்பட்டுள்ளது.
மாட்டுப் பொங்கலுக்குத் தேன்கல்பட்டி, கொக்குளம், பாறைப்பட்டி, சிக்கம்பட்டி ஆகிய ஊர்களுக்கு மாடுகளை அழைத்துச் சென்று ஆடை, பணம், இன்னபிற பொருட்களை வாங்கி வருகின்றனர். இதைப் பராமரிப்பதற்கென்று ஒருவர் ஊரில் நியமிக்கபட்டிருக்கிறார். அவர் சாமி மாட்டிற்கான மானியத்தையும், வருவாயையும் பராமரிப்பார். மாசிப்பச்சைக்கு மாடுகளைக் குளிப்பாட்டிப் புத்தாடை போர்த்திப் பெரிய மாலை அணிவித்து ஆதிசிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்குக் கட்டி வைக்கின்றனர். எனவே, சாமி மாடு என்பது வேளாண்மையின் செழிப்பைப் பெருக்குவதற்காகச் சிவன் கோயிலில் வளர்க்கப்படுகிறது. சாமிமாடு மரித்துவிட்டால் இறந்த மாட்டை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி நிறைய மாலைகள் போட்டு இறுதி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. அந்நாளை மக்கள் துக்கநாளாகக் கருதுகின்றனர். தேன்கல்பட்டியிலிருந்து மேலக்கால் செல்லும் வழியில் இடப்புறம் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே உள்ள தனிச்சுடுகாட்டில் தனியாகச் சாமி மாட்டைப் புதைக்கின்றனர். மக்கள் கூடி இறுதி மரியாதை செய்கின்றனர்.
கூடுதல் விவரங்கள்
ஆதிசிவன் கோயிலில் சாமிமாட்டின் மிகப் பெரிய சிலை ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை நந்தி அல்ல. இக்கோயில் ஆதிசிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. எனினும், மூலவராக லிங்கத்தை வழிபடாமல் அய்யனார்தான் வழிபடுகின்றனர். இந்தப் பகுதியில் வைதீகச் சிவன் கோயில் பரவுவதற்கு முன்பே ஐயன் மற்றும் செவன் (மூப்பர்) வழிபாடு இருந்திருக்கிறது எனவும், அதனால் செவன், செவனம்மாள் என்ற பெயர்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்றும் இங்குள்ளோர் கூறுகின்றனர்.
Name of the Chief deity
Saalimarathandu
Temple Tree
Saali tree
Temple Pond/River
Well
Festivals details
Special worship is conducted during the tamil months of Maasi and Thai.
Rituals of worship / Methods
Offering aarti (ritual of lighting a lamp and moving it in circular motions) to the bull and adorning it with new clothes.
Architecture
On a large platform, a pillar has been installed to symbolise the Saali tree.
Summary
At Aadhisivan Temple, Jallikattu bulls are dedicated to the deity as votive offerings. Anyone whose wishes have been fulfilled can donate a bull in favour of God Aadhisivan. These donated bulls are taken care of, near the Saali tree in Thēnkalpatti. Subsidiaries / grants are provided for the maintenance of these bulls. A well has been dug nearby to provide water for the bulls, and a resting shed, surrounded by neem trees, has been built.
During Maattu Pongal festival, these bulls are taken to villages such as Thenkalpatti, Kokkulam, Paaraipatti, and Sikkampatti, where people offer them clothes, money, and other gifts. A designated caretaker is assigned by the village to take care of the grants offered to the bulls.
On the day of the Maasi Pachai festival, the bulls are bathed, adorned with new clothes, and decorated with large garlands before being taken to the Aadhisivan Temple and tied there. The sacred bull (Saami Maadu) is raised at the Shiva temple to promote agricultural prosperity.
If a sacred bull dies, it is placed on a bullock cart, adorned with numerous garlands, and given a grand funeral procession. The day is considered a day of mourning by the local people. The bull is then buried separately in a dedicated cremation ground located to the left side of the road from Thenkalpatti to Melakkal, near a Shiva temple, with the villagers gathering to pay their final respects.
Additional Information
At the Aadhisivan Temple, a large statue of the Sacred Bull (Saami Maadu) has been installed. This statue is not Nandi. Although this temple is called Aadhisivan Temple, the Shiva Linga is not worshipped here as the main deity. Instead, Ayyanar is worshipped as a main deity.
Local people believe that even before Vedic Shiva temples became widespread, the worship of Ayyan and Sevan (ancestors) existed in this region. They also suggest that this is why names like Sevan and Sevanammal were commonly used in the region.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
செல்லும் வழி
செக்கானூரணியிலிருந்து தேன்கல்பட்டி செல்லும் வழியில் உள்ளது.
Directions
It is located on the way from Chekkanurani to Thenkalpatti.