Kalyana Karuppasami Temple is located to the south of Ariyapatti.
Name of the Chief deity
Karuppasami, Muthalamman, Kotaichami
Worship Timings
Worship is held from morning till evening.
Village Name
Ariyapatti
District
Madurai
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மொட்டை போடுதல், கிடாய் வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், சேவல் பலி, ஆகிய சடங்குகள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
1.கல்யாணக் கருப்புக் கோயில் வளாகம் தூண் மண்டபங்களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குக் கொடிக் கம்பம் உண்டு, சிறிய முகப்பும் சந்நிதியும் உள்ளன. அருகில் சிறிய மண்டபமும் இருக்கிறது.
2. முத்தாலம்மன் கோயில் ஒரு சிறிய கோவிலாகும். இங்கு விழா நடத்த மேடை அமைக்கப்பட்டுள்ளது.
3. கோட்டைச் சாமி என்பது ஒரு திறந்வெளியில் பீடமாக உள்ளது. அப்பீடத்தில் அரிவாளும் சூலமும் வைத்து வணங்கப்படுகிறது.
சுருக்கம்
1. கல்யாணக் கருப்பசாமி - இக்கோயிலுக்கு வந்து திரும்பும் மகளிரைப் பாதுகாப்பாக வீடுவரை சென்று விட்டு வந்ததால் அதற்குக் கிடாய் வெட்டி வணங்குகின்றனர். இவ்வூர் வம்சாவளிகள் மொட்டை அடித்தல் கடைப்பிடிக்கின்றனர். மாசிப்பச்சை விழா இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
2. முத்தாலம்மன் ஊரின் பொதுத் தெய்வமாகும். இக்கோயிலில் ஊர்மக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். மாவிளக்கு எடுக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை இங்குத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
3. கோட்டைச்சாமியை மக்கள் ஊரைக் காவல் காக்கும் வீரனாக வழிபடுகின்றனர்.
Festivals details
Special worship is conducted in the tamil months of Maasi and Panguni.
Rituals of worship / Methods
Worship in the form of ritual tonsuring / head shaving, goat and rooster sacrifices and lighting of rice flour lamp (Maavilakku) are performed.
Inscription / Copper
No
Architecture
1. The Kalyana Karuppu Temple complex is well-constructed with pillar mandapams. It has a flagpole, a small entrance, and a sanctum. There is another small mandapam nearby.
2. The Muthalamman Temple is a small temple. A stage has been set up here for conducting festivals.
3. Kotaisami temple is an open air temple containing a platform. Arivaals (elongated billhook like weapon) and a tridents are placed on the platform and worshipped.
Summary
1. Kalyana Karuppasami – It is believed that this guardian deity ensures the safe return of women to their homes after visiting his temple. As a mark of gratitude, people perform goat sacrifices in favour of this deity. The ancestral families of this village follow the tradition of ritual tonsuring/ head shaving. The Maasipachai festival is grandly celebrated here.
2. Muthalamman – She is a guardian deity of the village. All the villagers worship at this temple. Rice flour Lamp Offering ritual (known as Maavilakku ritual) is performed at this temple. An annual festival is celebrated here with great fervor.
3. Kottaichami – This deity is worshipped as the village guardian by the people of the village.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் ஆரியபட்டிப் பிரிவில் இடப்புறம் செல்லவேண்டும்.
Nearby Monuments
On the way from Madurai to Usilampatti, one must take a left turn at the Ariyapatti junction.