The three deities are enshrined together in the same complex, blessing the devotees.
Name of the Chief deity
Pechchi, Virumaandi, Maayan
Village Name
Karumathur
District
Madurai
பூசைக்காலம்
உச்சிப் பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடிவெள்ளி பூசை மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
சுருக்கம்
இக்கோயிலில் பேச்சி, விருமன், மாயன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
1. விருமாண்டி- கருமாத்தூரில் மூன்று சாமிகளுக்கும், 24 பட்டிகளுக்கும் காவல் தெய்வம் விருமாண்டியாகும். பேச்சியின் அழைப்பின் பேரில் வந்த விருமாண்டி பேய்க்காமனோடு சமர் புரிந்து பேச்சிக்கு இடத்தை உரிமையாக்கினார் என்பதால், இவ்விடத்தில் பேச்சியும் விருமாண்டியும் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். விருமாண்டிக்குத் தனி விழா எடுக்கப்படுவதில்லை. உச்சிப் பூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் தலைமைக் காவல் தெய்வமாக விருமாண்டி வணங்கப்படுகிறார்.
2. மாயாண்டி - இங்குப் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக மாயாண்டி வழிபடப்படுகிறார். பல குலவழக்கத்திலும் மாயன் வழிபாடு உண்டு. இவர் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாகக் கருதப்படுகின்றார். மழைவேண்டி மாயனை வழிபாடு செய்யும் பழக்கமும் உண்டு.
3. பேச்சி - தமிழ்ச் சமூகத்தில் பல குலவழக்கத்திலும் பேச்சியம்மன் வழிபாடு உள்ளது. கருமாத்தூர் வட்டாரக் கோயில்கள் எல்லாவற்றிலும் பரிவாரத் தெய்வங்களில் பேச்சி வழிபாடு காணப்படுகிறது. மக்கள், இங்குள்ள அம்மனைத் தலைமைப் பேச்சியாக வழிபடுகின்றனர்.
Worship Timings
Noon worship (uchchi kaala pooja) service is conducted.
Festivals details
Special worship is conducted in the tamil months of Maasi, Panguni and fridays of Aadi.
Summary
In this temple, there are separate shrines for the three deities: Pechchi, Viruman, and Maayan.
1. Virumaandi – In Karumathur, Virumaandi serves as the guardian deity for the three deities and the 24 sub-regions. It is believed that Virumaandi arrived at Pechchi’s call, fought Peikaaman, and secured the land for Pechchi, which is why both are worshipped together in this place. There is no separate festival dedicated to Virumaandi, but the Uchchi Pooja is celebrated grandly in this temple. Virumaandi is revered as the chief guardian deity in this region.
2.Maayandi – Maayandi is worshipped as one of the accompanying deities here. The worship of Maayan exists in many folk traditions, and he is considered a very powerful deity. There is also a practice of worshipping Maayan for rain.
3. Pechchi – In the Tamil society, the worship of Pechchiyamman is part of many folk traditions. In all the temples of the Karumathur region, Pechchi is worshipped as one of the accompanying deities. Here, the goddess is regarded as the chief Pechchi by the people.
தகவல்
முனைவர் இரத்தினகுமார்
Details
Dr. N. Rathnakumar
செல்லும் வழி
கருமாத்தூர் - வடக்கம்பட்டி சாலையில் கிழக்குப்பக்கமாக வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
Directions
The temple is located in the middle of the agricultural fields on the eastern side of the Karumathur - Vadakkampatti road.