There are idols of gods Shiva, Parvati, and Anjaneya.
place
Located near the village boundary.
Village Name
Vanchi Nagaram Kunnangudi Patti
District
Madurai
மூலவர் பெயர்
மலையாண்டி
தல மரம்
அரசமரம்
பூசைக்காலம்
வாரம் இரு நாட்கள் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
முளைப்பாரி, பால் குடம் போன்ற சடங்குகள். மஞ்சு விரட்டும் நடைபெறுகிறது. பங்குனி மாதம் சல்லிக்கட்டு நடைபெறும் பொழுது மலைமேல் உள்ள முருகர் தேரில் இம்மலையைச் சுற்றி வருவார்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில் ஔவையார் இக்கோவிலிருக்கும் மலை அடிவாரத்தில் வந்து தங்கியதாகச் செல்லப்படுகிறது. முருகன் இந்த மலைக்கு வந்து தன் திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதனால் இந்த கோயிலை ’மலையாண்டி முருகன் கோயில்’ என்கின்றனர். இந்த வழிபாட்டுத்தளம் சுமார் 1500 வருடம் பழைமையானதாக இப்பகுதி வாழ் மக்களால் கருதப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் 1000 வருடங்கள் பழமையான நாவல் மரம் இருப்பதாகவும் செல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
மலை அடிவாரத்தில் காணப்படும் ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு
கூடுதல் விவரங்கள்
மலையாண்டி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் திறந்தவெளி வழிபாட்டுத்தளமாக அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஒரு பீடத்தின் மேல் பல, உலோகத்தினால் ஆன, வேல் ஆயுதங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகில் உள்ள, படிகளுடன் கூடிய, பீடத்தில் ஒற்றை வேலாயுதம் நடப்பட்டுள்ளது. இந்த மலையின் முகப்பு மற்றும் மலையைச் சுற்றி உள்ள பெரிய பாறைகளில் தெய்வங்களின் உருவங்கள் சமீப காலத்தில் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. முருகன் சிவபெருமானுக்கு 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும் காட்சி, கைலாயத்தில் சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் முருகன் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் ஆஞ்சநேயர் சஞ்சீவினி மலையை ஏந்தி வரும் காட்சி ஆகியவை இப்பாறைகளில் வரையப்பட்டுள்ளன.
Name of the Chief deity
Malaiyaandi
Temple Tree
Pipal tree
Worship Timings
Worship is held twice a week.
Festivals details
Festival is conducted in the tamil month of Panguni (mid-Mar to mid-Apr) or Chithirai (mid-Apr to mid-May).
Rituals of worship / Methods
Devotees express their devotion by performing rituals such as Ceremonial Sprouting ritual (Mulaipaari), Ceremonial carrying of milk pot (Pāl Kuḍam) and by participating in Maňju Virattu (a type of traditional bull-taming sport). During the tamil month of Panguni, Jallikattu (a type of traditional bull-taming sport) is organised. During this event, god Murugan, who is enshrined on top of the hill, will circumambulate the hill in a chariot.
Inscription / Copper
No.
Architecture
An open-air temple structure found at the foothills.
Additional Information
This open-air shrine is located at the foot of the 'Malayandi Murugan Kovil' hill. At this place, several metal spears are placed on a pedestal. Adjacent to this a single spear (Vel) is placed on a pedestal with steps. The rocky surfaces of this hill and the large rocks surrounding the hill have been recently painted with images of deities. The scenes depicted on these rocks include god Murugan teaching the Pranava mantra 'Om' to god Shiva, a scene of god Shiva, Parvati, Pillayar, and Murugan sitting on Mount Kailash, and a scene of Anjaneya carrying Mount Sanjeevani.