Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கைலாசநாதர் ஆனந்தவல்லியம்மன் திருக்கோயில்

Kailasanathar Anandavalliyamman Temple

கோயிலின் வேறு பெயர்

கைலாசநாதர் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

அணுஞ்ய விநாயகர், தண்டாயுதபாணி, ஆனந்தவல்லி, தட்சிணாமூர்த்தி, கன்னிமூல கணபதி.


தலத்தின் சிறப்பு

இத்தலத்தில் ஒரே சந்நிதியில் இரட்டை பைரவர் காணப்படுவது தனிச் சிறப்பாகும்.


ஊர்

சூரனூர்

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
கைலாசநாதர்
தல மரம்
அரளி
கோயில் குளம்/ஆறு
கைலாசபுஷ்கரணி குளம், பாண்டியன் கிணறு
ஆகமம்
சிவாகமம் பின்பற்றப்படுகிறது.
பூசைக்காலம்
காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ஒரு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
நவராத்திரி, கார்த்திகை- திருக்கார்த்திகை, பிள்ளையார் சதுர்த்தி, கந்த சஷ்டி சூரசம்காரம், திருவாதிரை நட்சத்திரம் போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டுச் சடங்குகளில் அபிஷேகத்திற்குத் திரவியப் பொடி, பால், தயிர், பச்சரிசி மாவு, இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் விருப்பப்படி நந்திக்கும் முருகனுக்கும் பஞ்சாமிருதம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் பிற்கால பாண்டியர் கால கல்வெட்டுகள் பல உள்ளன. இவை பொது ஆண்டு 13 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகள் ஆகும். இவை கைலாசநாதர் கோயிலின் அம்மன் சந்நிதி சுவர்களிலும் முன் மண்டபச் சுவர்களிலும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. தெய்வக்கோமகன், தெய்வக்கணிய்யன் போன்ற மெய்யப்பர்களின் கொடைகள் பற்றி கூறுகின்றன. சித்தம்பல முதலியார் என்பவர் ஆறு கால் மணடபம் கட்டினார் என்பதை கூறுகின்றன. 'சடகோவிண்ணகர்' என்ற பெருமாள் கோயிலைப் பற்றியும் இவை கூறுகின்றன.
சிற்பங்கள்
கோயிலில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பைரவர், விநாயகர், நந்தி ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
சூரனூரில், பத்மாசுரன் (பஸ்மாசுரன்) என்ற அரக்கன் சிவபெருமானிடம் தவம் புரிந்து வரம்பெற்றான். அதன் மூலம் பத்மாசூரன் யார் தலையில் கை வைத்தாலும் அவர் சாம்பலாகிவிடுவார். இவ்வரத்தைச் சிவபெருமான் தந்தருளியதும் முதலாவதாகச் சிவபெருமான் தலையிலேயே கை வைக்கப் பத்மாசூரன் முற்பட்டான். எனவே, சிவபெருமான் விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்தார். விஷ்ணுவும் அரளிப் பூவுக்குள் மறைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் மறைந்து கொண்டார். இச்சிக்கலை சரி செய்வதற்காக விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்துச் சூரனிடம் சென்றார். மோகினியின் அழகில் மயங்கிச் சூரன் நிற்க, மோகினி அவனைத் திருநீறு பூசிவரும்படி கூறினார். பத்மாசுரனும் திருநீறு பூசும்போது தன் தலையிலேயே அவன் அறியாமல் கை வைத்துவிடுகிறான். அதனால் பத்மாசுரன் சாம்பலாகிவிடுகிறான். பிறகு விஷ்ணு சிவபெருமானை வெளிவரச்செய்தார். இதன் காரணமாக இக்கோயிலில் விஷ்ணுவுக்குச் சிலை உள்ளது என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
இத்தலத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், தேவகோட்டங்கள் மற்றம் ஆனந்தவல்லி அம்மன் சந்நிதி போன்றவை காணப்படுகின்றன.
சுருக்கம்
இந்தச் சிவன் கோயிலில் விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், நந்தி மண்டபம், ஆனந்தவல்லி அம்மன் சந்நிதி, இரட்டை பைரவர் சிலைகள் ஆகியன உள்ளன. முன்மண்டபத்தில் 6 தூண்கள் உள்ளன. அம்மன் சந்நிதி சுவர்களிலும், முன் மண்டபத்திலும் உள்ள கல்வெட்டுகள் இக்கோயிலுக்குப் பலர் அளித்த தானங்களையும், சடகோவிண்ணகர் என்ற பெருமாள் கோயிலைப் பற்றியும் கூறுகின்றன. இக்கோயில் வளாகத்தில் கொடிமரத்தின் அடிப்பாகமும், சிவலிங்கத்தின் ஆவுடையும் தனியே காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இத்தலம் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இப்போது இராமநாதபுரம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1 (பக்கம் 197-200) விருதுநகர் மாவட்ட வரலாறு (இக்கோயில் பூசாரி தெய்வ சிகாமணி என்பவர்.)
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
முடுக்கன்குளம் அம்பலவாணன் சிவன் கோயில்.
செல்லும் வழி
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.