Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாரியம்மன் கோயில்

Mariamman Temple

அமைவிடம்

அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் முதன்மைச் சாலையில், திருச்சுழியில் உள்ளது.


மூலவர் பெயர்

மாரியம்மன்


கோயில் குளம்/ஆறு

சொக்கு அம்மன் கோயில் குளம்


ஊர்

திருச்சுழி

மாவட்டம்

விருதுநகர்

பூசைக்காலம்
காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் நந்தி பூசணி பலி, ஆடுபலி, அம்பாள் ஊர்வலம், அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் மஞ்சள், பால், திரவியப் பொடி, இளநீர், சர்க்கரை, நெய், தயிர், பழங்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. தெய்வத்தின் கழுத்திற்கு மல்லி, முல்லை, பிச்சி ஆகிய பூமாலைகளும், தலைக்குக் கதம்ப மாலையும் சூட்டப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொதுஆண்டு 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
மூலவர் மற்றும் நந்தி சிலைகள்.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன்மண்டபம் மட்டும் கொண்ட கோயில். கருவறைக்கு வெளியில் நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியன உள்ளன.
சுருக்கம்
திருச்சுழி மாரியம்மன் கோயில் இப்பகுதி மக்களிடையே மிகுந்த புகழ் பெற்ற கோயிலாகத் திகழ்கிறது. இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. மேலும் இக்கோயில் வளாகத்தில் ஒரு சிறிய சூலக்கல் உள்ளது. சூலத்தின் இருபுறமும் சூரிய சந்திரன் காட்டப்பட்டுள்ளன. இக்கல்லின் இருபுறமும் உள்ள நாகர் உருவங்கள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. இதுவும் தோராயமாக 300 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு ’சக்தி கிடாய்’ என்று அழைக்கப்படும் செம்மறி ஆடு பலியிடப்படுகிறது. இக்கோயிலில் மாசிப் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நந்தி பூசணி பலி, ஆடுபலி, அம்பாள் ஊர்வலம், அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சுழிகை சொக்கு அம்மன் கோயில்
செல்லும் வழி
அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் முதன்மைச் சாலையில் 15ஆவது கிலோ மீட்டரில் திருச்சுழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருச்சுழி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்