Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

திரௌபதியம்மன் கோயில்

Draupadiamman Temple

தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் அரவான் படுகளம் நடத்தப்படுகிறது. படுகளம் என்பது மகாபாரதப் போரின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நிகழ்த்திக்காட்டும் சடங்காகும்.


மூலவர் பெயர்

திரௌபதியம்மன்


பூசைக்காலம்

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை வழிபாடு நடைபெறும்.


ஊர்

திருச்சுழி

மாவட்டம்

விருதுநகர்

திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்துத் தேங்காய் பழம், மல்லிகைப்பூ, சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவியப் பொடி போன்றவற்றை வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
திரௌபதியம்மன், பிள்ளையார், முருகன் மற்றும் பிற சிலைகளும் உள்ளன. கருவறையின் வாயிலுக்கு மேல் கஜலட்சுமி புடைப்புச் சிற்பமும் உள்ளது.
தல வரலாறு / கதைகள்
திரௌபதி அம்மன் கோயிலானது திருச்சுழியில் பூமிநாதன் கோயில் அருகே ஒரு வன்னி மரத்தடியில் முன்பு வணங்கப்பட்டு வந்தது. பின்பு கோயில் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. வேறு இடத்திலிருந்து பிடி மண் எடுத்து வந்து அதை இங்கு வைத்து வழிபடுவதாக இக்கோயில் பூசாரிகள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
கருவறை, முகமண்பம் மட்டும் கொண்ட அண்மைக்காலக் கட்டுமானம்.
கூடுதல் விவரங்கள்
இங்கு கருவறையைச் சுற்றித் திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சாந்தார அமைப்பு என்பர். கோயிலுக்கு வெளியில் கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. இக்கோயிலில் கொடியேற்றத்திற்குப் பின் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அத்திருவிழாவில் அரவான் படுகளம், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பூமிநாதன் கோயில்
செல்லும் வழி
அருப்புக்கோட்டையில் இருந்து நரிக்குடி செல்லும் முதன்மைச் சாலையில் 15ஆவது கிலோ மீட்டரில் திருச்சுழியில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருச்சுழி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.