திருவிழா நடைபெறுவதில்லை ஆனால் சிவராத்திரி மற்றும் மாதம்தோறும் பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய், பழம், வாசனைத் திரவியங்கள், வில்வமாலை போன்றவை வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நைவேத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் மாறவர்மன் குலசேகரன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் 4ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ’தொண்டை நாட்டு அரையன் வேல்முருகன்' என்பவன், திருவெட்டீசுவரமுடைய நாயனாரும், உமா தேவியாரும் திருவீதியுலா எழுந்தருளுவதற்காகத் தானம் வழங்கியுள்ளான். இவ்வாறு திருவிழா திருக்கல்யாண உத்சவமாகக் கொண்டாடப்படவேண்டும் எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. முதலாம் மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டு, இவ்வூர்ச் சபையார் சில நிலங்களை விற்று அதில் வந்த வருவாயைக் கோயிலுக்குத் தானமாக வழங்கிய செய்தியைத் தருகின்றது.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம், நந்திமண்டபம், விநாயகர் சந்நிதி ஆகிய அமைப்புகள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இச்சிவன் கோயிலில் கருவறை, இடைநாழிகை, அர்த்தமண்டபம் முதலான பகுதிகள் காணப்படுகின்றன. அரைத் தூண்களும், பொய்க்கோட்டங்களும் சுவர்ப்பகுதியை அழகு செய்கின்றன. கபோதத்திற்குமேல் அழகிய யாளிவரி கட்டப்பட்டுள்ளது. தேவகோட்டங்களில் காணப்படும் தட்சிணாமூர்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை சிலைகள் சிறியதாக உள்ளன. இக்கோயிலில் கல்வெட்டுகள் கருவறையின் வெளிச்சுவர் மற்றும் குமுதப் பகுதியில் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்
Worship Timings
A single ritual is performed in the morning.
Festivals details
No annual festival is held, but special poojas are conducted on Shivaratri and every month on Pradosham days.
Rituals of worship / Methods
Coconut, fruits, fragrant liquids, and bilva garlands are used for worship. Offering Naivedyam is a customary practice.
Inscription / Copper
In this temple, inscriptions of Maravarman Sundara Pandiyan I and Maravarman Kulasekaran I are found. An inscription from the 4th regnal year of Maravarman Sundara Pandiyan I mentions that "Velmurugan, the chieftain of Tondai Nadu," donated for the purpose of conducting a procession (*Thiruveedhi Ula*) for Thiruvetteeswaramudaiya Nayanar and Uma Deviyar. The inscription specifies that this festival must be celebrated as a *Thirukalyana Utsavam* (sacred wedding festival). Another inscription of Maravarman Kulasekaran I records that the village assembly (*Sabaiyar*) sold certain lands and donated the revenue obtained from it to the temple.
Architecture
Sanctum, arthamandapam, front mandapam, nandimandapam, and Vinayakar shrine structures are present.
Additional Information
This east-facing Shiva temple includes parts such as the sanctum, intermediate passage, and ardhamandapa. Half-pillars and arches enhance the beauty of the wall sections. Above the kapota, a beautiful yali frieze is carved. The devakoshta sculptures of Dakshinamurti, Lingodbhava, and Durga are small in size. Inscriptions are found on the outer wall of the sanctum and on the kumudha section of this temple.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு, பக்கம் 46,47.
Reference
விருதுநகர் மாவட்ட வரலாறு, பக்கம் 46,47.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெருமாள் கோயில், செட்டிக்குறிச்சி.
Nearby Monuments
Perumal Temple, Chettikkurichi.
செல்லும் வழி
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
Directions
It is located on the road from Aruppukottai to Pandalkudi.