செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாத்தில் 8 நாட்கள் களரித் திருவிழா நடைபெறும். களரி என்பது குலதெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
காப்புக் கட்டுதல், அக்கினிச் சட்டி மற்றும் 1000 கண் பானை எடுத்தல், மண் பொம்மை, செம்மறி பலியிடல் போன்ற வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 1996இல் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது என்பதைத் தெரிவிக்கும் கல்வெட்டு காணப்படுகிறது.
சிற்பங்கள்
இக்கோயில் வளாகத்தில் மூன்று அம்மன் சிலைகள், இரண்டு துவாரபாலகிகள், சோனைக்கருப்பு, பெரிய கருப்பு, சின்ன கருப்பு, பலி பீடம் மற்றும் நந்தி ஆகிய சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
விமானத்துடன் கூடிய கருவறையும் முன்மண்டபமும் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் முன்மண்டபத்தில் இரண்டு துவாரபாலகி சிலைகள், ஒரு நீள் சதுரக்கல் (சூலக்கல்) மற்றும் அதன் அருகில் திரிசூலமும், பிற தெய்வச் சிலைகளும் உள்ளன. இக்கோயில் கிழவனேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பல சமுதாயத்தினருக்கும் குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. இந்தக் கோயில் இன்றளவும் அக்கினி வீரபத்திரரின் வம்சாவளிகளால் பூசை செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
கிழவனேரி அருகே சத்திரம் புளியங்குளம் கிராமம் உள்ளது. இவ்வூரில் அக்கினி வீரபத்திரர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவரின் கனவில் தோன்றிய குலதெய்வம், இப்போது இக்கோயில் இருக்கும் இடத்தில், இருப்பதாகக் கூற, அவரும் அங்குச் சென்று குடிசை போட்டு அவ்விடத்தில் மண் பிடித்து வழிபட்டு வந்துள்ளார். அந்தச் சமயம் காட்டாற்று வெள்ளத்தில் மிதந்து ஒரு பூசைப் பெட்டி வந்துள்ளது. அதனை வழிபட்டு வந்துள்ளார். அக்கினி வீரபத்திரர் இறந்த பிறகு அவர் செய்து வந்த பூசைகளை அவரது பிள்ளைகளும் செய்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பொது ஆண்டு 1996இல் இங்குக் கோயில் கட்டிக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
Temple Pond/River
Village Tank
Worship Timings
Pujas are conducted only on Tuesdays and Fridays
Festivals details
"During the month of Purattasi, an 8-day Kalarai festival is held. 'Kalari' is associated with the worship of the clan/family deity (Kuladeivam)."
Rituals of worship / Methods
Rituals such as tying the protective thread/ to tie an amulet (Kappu Kattuthal), fire pot ceremony (Akkini Chatti), carrying the ‘1000-eyed pot’, clay figurines, and offering of a male goat (Semmari sacrifice) are observed."
Inscription / Copper
An inscription is found indicating that the temple's Kumbhabhishekam (consecration ceremony) was held in the year 1996 CE
Sculptures
Within the temple premises, there are three Amman statues, two Dwarapalakis (female guardian deities), Sonai Karuppu, Periya Karuppu, Chinna Karuppu, a bali peetam (sacrificial altar), and a Nandi statue
Architecture
The sanctum (garbhagriha) with a vimana and the front mandapa (hall) can be seen.
Additional Information
In the front mandapa of this temple, there are two Dwarapalaki statues, a long rectangular stone (sula-kal or sacrificial stone), a trident (trishul) placed nearby, and several other divine statues. This temple continues to serve as the clan deity (Kuladeivam) for the people of Kilavaneri and the surrounding villages, as well as for members of various communities. To this day, the temple rituals and maintenance are carried out by the descendants of Agni Veerabathirar.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சிவன் கோயில்
Nearby Monuments
Sivan temple
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து திருச்சுழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Directions
It is located 7 kilometers along the route from Kariyapatti to Tiruchuzhi