Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

புற்றுக்கோயில்

Anthill Temple

கோயிலின் வேறு பெயர்

புற்று நாகாத்தம்மன் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

நாகாத்தம்மன்


தலத்தின் சிறப்பு

புற்று மண்ணை நாகாத்தம்மனாகப் பாவித்து வழிபட்டு வருகின்றனர்.


ஊர்

கணக்கனேந்தல்

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
நாகாத்தம்மன்/நாகம்மா
கோயில் குளம்/ஆறு
ஊர்ப் பொதுக்குளம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் வழிபாடுகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கார்த்திகையில் ஒரு நாள் பகல் வேளையிலும், ஆடியில் பௌர்ணமி இரவிலும் புற்றுக்கோயில் திருவிழா நடைபெறுகிறது. புற்றுக்கோயிலிலுள்ள நாகாத்தமனை வழிபடுவதன் மூலம் பிள்ளைப்பேறு, நினைத்த காரியம் நிறைவேறுதல் மற்றும் நல்ல விளைச்சல் ஏற்படும் என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால்குடம், முளைப்பாரி, அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், அன்னதானம் அளித்தல் போன்ற நேர்த்திக்கடன் முறைகள் வழக்கத்தில் உள்ளன. திருவிழாவின் போது காப்புக்கட்டி நோன்பு இருந்து இறைச்சி உண்ணாமல் பக்தியோடு இருக்கின்றனர். எனவே, இங்குப் பலியிடும் வழக்கம் இல்லை.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 2018
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
அரசு ஆணையின்படி கருவேல மரங்களை அகற்றும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், அப்போது இந்தப் புற்று தெரிய வந்ததாகவும் இக்கோயில் நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஊர் மக்கள், இப்புற்று அமைந்துள்ள இடத்தில் இரும்புக்கூரை அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோயில் அமைப்பு
புற்றைச் சுற்றி இரும்புக் கூரை அமைப்பு உள்ளது,
கூடுதல் விவரங்கள்
புற்று நாகாத்தம்மன் கோயில் நிர்வாகிகள், நாள்தோறும் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். புற்றின் முன்பு நாகர் சிலைகளும் அம்மன் உலோகச் சிலைகளும் வைத்து வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பிரதானச் சாலையில் வக்கணாங்குண்டு அருகே உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்