Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில்

Lakshmi Narasimha Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

நரசிம்மர் கோயில்


அமைவிடம்

வீரசின்னம்மாள் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

இலட்சுமி நரசிம்ம பெருமாள்


ஊர்

காரியாபட்டி

மாவட்டம்

விருதுநகர்

திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் திருவிழா நடைபெறும். 2019ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
இலட்சுமி நரசிம்மர், கருப்பசாமி மற்றும் நாகம்மா சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
இப்போது கோயில் இருக்கும் இடத்தில் சுக்காம்பட்டி என்ற கிராமம் இருந்துள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் அக்குடியிருப்புப் பகுதி அழிந்துள்ளது. அதன் காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் மேடான பகுதிக்கு சென்றனர்(தற்போதுள்ள தோப்பூரில் வந்து தங்கியுள்ளனர்). சுக்காம்பட்டியில் மக்கள் வசித்து வந்த போது இக்கோயில் தோன்றியிருக்கலாம் என்று இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அண்மைக்காலத்தில் தான் இக்கோயில் அடையாளம் காணப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்று வருகிறது.
கோயில் அமைப்பு
நரசிம்மர் சந்நிதியில் படிக்கட்டுகளுடன் கூடிய, கருவறை அமைப்பை மட்டும் கொண்ட கட்டுமானம் உள்ளது. அதன் முன்பு இரும்புத் தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திறந்தவெளியில் பீடத்தின் மேல் கருப்புசாமி மற்றும் நாகம்மா சிலைகளும் உள்ளன.
சுருக்கம்
கோயில் கருவறையில் நரசிம்மர் நான்கு கைகளுடன் காணப்படுகிறார். அவரது இடப்பக்கத்தில் இலட்சுமி தேவி அமர்ந்துள்ளார். நரசிம்மர் அணிகலன்கள் மற்றும் கிரீடம் அணிந்தவாறு, தன் மேல் இருகரங்களில் சங்கு மற்றும் சக்கரம் பிடித்துள்ளார். இவரது முன் கைகள் அபயம் மற்றும் வரத முத்திரைகளில் உள்ளன. இக்கோயில் கருவறையின் வெளியே, திறந்தவெளியில் தனி பீடத்தில் கருப்புசாமியும் சிறிய நாயும், வேறு ஒரு பீடத்தின் மேல் 3 நாகம்மா சிலைகளும், அருகில் ஒரு நீள் சதுரக்கல் மற்றும் அதன் அருகில் திரிசூலமும் வைக்கப்பட்டிருக்கின்றன. கருப்புசாமி இடக்கையில் கதையுடனும் வலக்கையில் அரிவாளை உயர்த்தியவாறும், முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கிறார். இவர் தன் தலையில் கொண்டை, கை கால்களில் அணிகலன்கள் மற்றும் வீரசன்னம் அணிந்துள்ளார்.
கூடுதல் விவரங்கள்
இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலை, தோப்பூரின் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு குடும்பத்தார்கள் மட்டும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதுவரை இக்கோயிலில் இரண்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது. வேறு திருவிழாக்கள் இதுவரை நடைபெறவில்லை.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வீரசின்னம்மாள் கோயில்
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து தோப்பூர் செல்லும் சாலையில் 6 கால் கல் மண்டபம் காணப்படுகிறது. அந்த மண்டபத்திற்கு எதிரே வீரசின்னம்மாள் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.(காரியாபட்டி - திருச்சுழி சாலை)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்