Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

செல்லியாரம்மன் கோயில்

Selliyāramman Temple

மூலவர் பெயர்

செல்லியாரம்மன்


தல மரம்

வேம்பு


கோயில் குளம்/ஆறு

வைப்பாறு


ஊர்

சிந்துவம்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

பூசைக்காலம்
மக்கள் விருப்பத்தின் பேரில் பூசை நடைபெறும்
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி, மாசி மாதங்களில் ஒரு நாள் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பூ, பழம், தேங்காய் போன்றவை படைக்கப்படுகின்றன. மேலும் வழிபாட்டில் ஆட்டுக்கிடாய், சேவல் போன்றவை பலி கொடுக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
மூலவரான செல்லியாரம்மனைத் தவிர நாகர், முனிவர்கள், கருப்புசாமி, கையில் ஆயுதங்களுடன் தெய்வ உருவங்கள் போன்றவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
இப்பகுதி மக்கள் செல்லியாரம்மனின் ஒரு சிற்பத்தை மட்டும் இவ்விடத்தில் வைத்து இருநூறு ஆண்டுகளாக வழிபட்டு வந்துள்ளதாகவும், பின்பு பொது ஆண்டு 2004இல் ராஜாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர் மக்கள் இவ்வம்மனைப் பீடத்தின்மேல் அமர்த்தி, சுற்றிக் கோயிலமைத்து அன்று முதல் சிறப்பாக வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
செல்லியாரம்மன் சிலை கூரை மற்றும் நான்கு தூண்கள் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி உருளை வடிவக் கூரையில்லாத கோயில் கட்டப்பட்டுள்ளது. அம்மனைச் சுற்றிப் பிற தெய்வங்கள் சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
தனித்துவமான அமைப்பைக்கொண்ட இந்தச் செல்லியாரம்மன் கோயிலில் அம்மனைச் சுற்றிச் சுமார் 13 தெய்வங்கள்/ உருவங்கள் சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. கோயிலின் வெளியில் பலிபீடமும் ஒரு மரத்தடியில் கருப்புசாமி சிற்பமும் காணப்படுகின்றன. இப்பகுதி மக்கள் செல்லியாரம்மனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வீரபெருமாள் கோயில், சிந்துவம்பட்டி.
செல்லும் வழி
சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் விவசாய நிலம் அருகே அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
சாத்தூர்
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்