Lingesvarar Temple, Anandha Meenakshi Sametha Sri Amuthalingesvarar.
Name of other deities
Parvathi
Name of the Chief deity
Amudhalingeswarar
Village Name
Kalkurichi
District
Virudhunagar
கோயில் குளம்/ஆறு
கோயில் குளம்
பூசைக்காலம்
காலை 08.00 முதல் 10.30, மாலை 06.00 முதல் 08.00 மணி வரை வழிபாடு நடைபெறும். இங்கு இருகால பூசை நடைபெற்று வருகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒரு நாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பிரதோசம், அமாவாசை, பௌர்ணமி வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் சிவராத்திரி, திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வில்வ மாலை, பூ மாலைகள், தேங்காய், பழம், வாசனை திரவியங்கள், நெய்வேத்தியம் செய்வது, பொங்கல் இட்டு பூசைகள் செய்வது போன்ற வழிபாட்டு சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
இங்கு உள்ள ஒரு தனிக்கல்லில் இக்கோயிலுக்கு தானம் வழங்கப்பட்ட செய்தி வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு முற்றிலும் சிதைந்துள்ளதால் (எழுத்துக்கள் தேய்ந்துள்ளன) சரியாக படிக்க முடியவில்லை. கல்வெட்டின் எழுத்து அமைதியின் அடிப்படையில் இது பொது ஆண்டு 17ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சிற்பங்கள்
நந்தி, விநாயகர், நாகர், காலபைரவர், சாஸ்தா போன்ற சிலைகள் மற்றும் தேய்ந்த நிலையில் பழைய சிலை ஒன்றும் இக்கோயில் வளாகத்தில் உள்ளது.
கோயில் அமைப்பு
கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், நந்திமண்டபம் போன்றவையுடன் சுற்றுச்சுவரோடு கோயில் அமைந்துள்ளது.
சுருக்கம்
ஆனந்த மீனாட்சி சமேத அமுதலிங்கேஸ்வரர் ஒரு சிவன் கோயிலாகும். பழங்கால எச்சங்களாக தற்போதும் இக்கோயிலில் லிங்கம், நந்தி மற்றும் விஷ்ணு சிற்பங்கள் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது, இக்கோயில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு பிற்கால பாண்டியர் காலத்தில் இக்கோயில் முதன்முதலில் எழுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் இக்கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கூடுதல் விவரங்கள்
கல்குறிச்சி கிராம பொதுமக்கள் பொது ஆண்டு 2008 ஆம் வருடம் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனர். அதன் பிறகு அன்றாடம் இருகால பூசை நடைபெற்று வருகிறது.
Temple Pond/River
temple pond
Worship Timings
Worship takes place from 08:00 to 10:30 in the morning and from 06:00 to 08:00 in the evening. Two daily rituals are performed here.
Festivals details
In the months of Chithirai, Aani, Purattasi, Aippasi, Karthigai, and Margazhi, a one-day festival is celebrated. Every month, special worship is conducted on Pradosham, Amavasai (New Moon), and Pournami (Full Moon). Additionally, events like Sivarathri and Thirukalyanam are also observed.
Rituals of worship / Methods
Vilva garlands, flower garlands, coconut, fruits, fragrant liquids, offering Naivedyam, preparing pongal, and performing poojas are the worship rituals followed.
Inscription / Copper
A donation made to this temple is inscribed on a separate stone found here. However, due to severe weathering (the letters have eroded), the inscription is not fully legible. Based on the paleographic features of the script, it is presumed to belong to the 17th century CE.
Sculptures
Statues of Nandi, Vinayaka, Nagar, Kalabhairava, sasta, and an old worn-out idol are present within the temple premises.
Architecture
The temple is built with a sanctum sanctorum, arthamandapam, front mandapam, nandimandapam, and surrounded by a compound wall.
Summary
Ananda Meenakshi along with Amudhalingeswarar is a Shiva temple. As remnants of the past, lingam, Nandi, and Vishnu sculptures are still found in this temple. Based on the style of these sculptures, it is believed that the temple was first built during the later Pandya period in the 13th century CE. Although the temple has witnessed several regime changes since the Pandya period, it has remained a site of continuous worship.
Additional Information
The residents of Kalkurichi village performed the Kumbabishekam for this temple in the year 2008 CE. Since then, daily rituals are being conducted twice a day.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
விநாயகர் கோயில்
Nearby Monuments
Vinayagar Temple
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
Directions
It is located on the road from Kariyapatti to Aruppukottai.