ஊர் பொதுக்குளம் உள்ளது. 1 கிமீ தொலைவில் குண்டாறு உள்ளது.
பூசைக்காலம்
தினசரி காலை 7 மணிக்கு பூசை செய்யப்படும். திருவிழாக் காலங்களில் 3 வேளை பூசைகளும் ( காலை, மதியம், இரவு), மார்கழி மாதம் 30 நாள் காலை பூசையும் நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதம் 3 நாள் திருவிழா (பௌர்ணமி அன்று) நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆடி மாத திருவிழாவாவின் போது கடைபிடிக்கப்படும் வழிபாட்டுச் சடங்குகள்: காப்பு கட்டுதல், திருவிழாவின் முதல் நாள் சேவல் காவு கொடுத்து சக்தி கிடாய் வெட்டுதல், மொட்டை அடித்தல், பொம்மை செய்து வைத்தல், குதிரை எடுப்பு நிகழ்வு 15 கிலோமீட்டர் ஊர்வலமாக கொண்டு வருதல் ( காரியாபட்டி தாலுகா தோப்பூரில் இருந்து பனையூர் வரை), மார்கழி மாதங்களில் தினசரி காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்தல், அய்யனாருக்கு தேங்காய், பழம், பொங்கல், படையல் வைத்தல், மணி எடுத்து வைத்தல் ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன. இங்கு சுருட்டு, மது உள்ளிட்டவைகள் படைக்கும் வழக்கம் இல்லை.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டு பழமையானதாக கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
குதிரைமேல் அமர்ந்த அய்யனார், விநாயகர், நாகர், கருப்பசாமி, வேட்டை நாய் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இவைஅண்மைக்காலச் சிற்பங்கள் ஆகும்.
தல வரலாறு / கதைகள்
தல வரலாறாக வாய்மொழி கதை ஒன்று கூறப்படுகிறது. மதுரையில் நாயக்கர் ஆட்சி காலத்தின் போது தமிழகத்தின் வடபகுதியில் இருந்து வர்த்தகம் செய்ய ஒரு சமூகத்தினர், அழகர் கோயில் வழியாக மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஓய்வெடுக்க அழகர்கோயில் அருகே தங்கியுள்ளனர். அவர்களிடம் அதிகமாக நகைகள் மற்றும் தூணி உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. அப்போது அவர்களுக்கு பசி எடுத்ததால் அருகில் இருந்த அன்ன சத்திரத்தில் உணவருந்த சென்றுள்ளனர். அங்கு இருந்த பணியாளர்கள் இவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் துணிகளுக்கு ஆசைப்பட்டு உணவில் விஷம் கலந்தனர். விஷம் கலந்த அந்த உணவை உண்ட பின்பும் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இதற்கு காரணம் அவர்களின் இறை பக்தியே. இதை அறிந்து கொண்ட அந்த அன்னச்சத்திர பணியாளர்கள் இவர்களிடம் ’கடவுள் அய்யனாருடைய அருளால் நீங்கள் பிழைத்தீர்கள் நாங்களும் திருந்தி விட்டோம்’ என்று மன்னிப்பு கோரினர்.
’எங்களைக் காப்பாற்றியது ”பச்சை நாவியை (விசம்) பாலாக்கிய (அமிர்தம்) அய்யனார்” தான்’ என்று அவர்கள் கூறி, அழகர்கோயில் அய்யனார் மற்றும் அழகர்மலை சுந்தர ராஜபெருமாள் மீது பக்தி கொண்டு தங்களுடைய பயணத்தை தொடர்ந்தார்கள். இக்குடும்பத்தின் ஒரு குழு இவ்வூரில் வந்து தங்கி உள்ளது. அவர்கள் இங்கே ’பச்சை நாவியை பாலாக்கிய’ அய்யனார்க்கு மண்ணால் ஆன சிற்பம் செய்து வழிபட்டு வந்துள்ளனர். அழகர் கோவிலை தங்களுடைய குலதெய்வமாகவும் வழிபட ஆரம்பித்தனர். இந்த மரபு இன்றும் தொடர்கிறது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலைச் சுற்றிச் சிறிய மதில் சுவர் உள்ளது. நுழைவாயிலில் அய்யனார் குதிரையின் மேல் அமர்ந்துள்ள பெரிய சுதைச் சிற்பம் காணப்படுகிறது. அருகில் சுதையால் செய்யப்பட்ட பூதகணங்கள் உள்ளன. கோயில் வளாகத்தினுள் கருப்புசாமி, சொலைசாமி, வேட்டை நாய், நாகர்சிற்பம் ஆகிய கற்சிற்பங்களும் பிற சுதை சிற்பங்களும் தனி பீடங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மதில்சுவரை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட குதிரை சிற்பங்கள் காணப்படுகின்றன.
Temple Pond/River
The village has a public pond. The Gundaru is located 1 km away.
Worship Timings
Daily puja is performed at 7 AM. During festival times, three pujas (morning, noon, and night) are conducted, and in the month of Margazhi, morning puja is held for 30 days.
Festivals details
Once every two years, a 3-day festival is celebrated during the month of Aadi, on the day of Pournami (Full Moon).
Rituals of worship / Methods
Worship rituals observed during the Aadi month festival include: tying protective threads (Kaappu Kattuthal), on the first day of the festival sacrificing a rooster and performing the power ritual of cutting/sacrificing the Kidai (Goat), beating the head (Mottai Adithal), making and placing effigies (Pommai), and the horse-carrying event (Kuthirai Eduppu) conducted as a 15-kilometer procession from Thoppur in Kariyapatti taluk to Panaiyur. In the months of Margazhi, daily morning pongal is prepared and worshipped. Offerings such as coconut, fruits, pongal, and Padiyal are made to Ayyanar, and a bell (Mani) is hung as part of the rituals.Here, it is customary not to prepare intoxicants like suruttu (liquor) or madhu (alcohol).
Inscription / Copper
No
Sculptures
Sculptures of Ayyanar seated on a horse, Vinayaka, Nagar, Karuppasamy, and a hunting dog are present. These are recent sculptures.
Architecture
An open-air temple structure / temple without a roof.
Additional Information
A small compound wall surrounds this temple. At the entrance, there is a large stucco sculpture of Ayyanar seated on a horse. Nearby, stucco figures of his attendants are also present. Within the temple premises, stone sculptures of Karuppusami, Solaisami, hunting dog, and Nagar, along with other stucco figures, are placed on separate pedestals. Along the temple’s compound wall, decorated horse sculptures are seen.
தகவல்
முனைவர் செல்லப்பாண்டியன்
Details
Dr. C. Chellapandian
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அங்கள ஈஸ்வரி குருநாதன், சுடலை மாடசாமி, காமாட்சி அம்மன் ஆலயம்.