Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சுடலை மாடன் சுவாமி கோயில்

Sudalai Mādan Swami Temple

கோயிலின் வேறு பெயர்

குருநாதன் சுடலை மாடசாமி கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

கருப்பு, சுடுகாட்டு தெய்வம், சோனையா


மூலவர் பெயர்

குருநாதன்


ஊர்

பனையூர்

மாவட்டம்

விருதுநகர்

தல மரம்
கோயிலில் வேம்பு வழிபடப்படுகிறது.
கோயில் குளம்/ஆறு
அருகில் தென் பகுதியில் குண்டாறு உள்ளது.
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ( மாலையில்) வழிபாடு நடைபெறும். இது தவிர வெளியூரிலிருந்து வழிபாடு செய்ய மக்கள் வரும்போது, பூஜை நடைபெறும். இது தவிர பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று மாலையில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாத களரி முக்கியமான திருவிழாவாகும். முன்பு இகோயிலில் 16 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்துள்ளது தற்போது 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆடு மற்றும் கோழி பலியிடுதல், வேல் குத்துதல், மணி எடுத்து வைத்தல், விளக்கு எடுத்து வைத்தல், முடி காணிக்கைச் செலுத்துதல், கரும்பு தொட்டிலில் குழந்தை கொண்டு வருதல், குதிரை எடுப்பு உள்ளிட்டவை முக்கியமான வழிபாட்டுச் சடங்குகள் ஆகும்.
காலம்/ ஆட்சியர்
மதுரை நாயக்கர் காலமாக இருக்கலாம்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
இங்கு பல அண்மைக்கால சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் வனதேவதை எனப்படும் அம்மன் சிலையும் ஒன்று.
தல வரலாறு / கதைகள்
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சுழி குண்டாற்றிலிருந்து தண்ணீரில் ஒரு சிலை அடித்து வரப்பட்டுள்ளது. அது ஒரு மண் சிலையாகும். இவ்வூர் மக்கள்அந்த சிலையை எடுத்து வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அந்த சிலை குருநாதன் சாமி என அழைக்கப்பட்டு வந்துள்ளது. அப்பொழுது இப்பகுதிக்கு வந்த திருமலை நாயக்கர், இவ்வூர் மக்கள் மண்ணால் ஆன சிலையை வழிபடுவதை பார்த்து, அதை மாற்றி கல்லாலான சிலை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆனால் அச்சிலை தற்போது இக்கோயிலில் இல்லை.
கோயில் அமைப்பு
மூலவர் சந்நிதி மற்றும் பிற தெய்வ சந்நிதிகளும் உள்ளன.
சுருக்கம்
இந்த கோயில் வளாகத்தில் மூலவர் சந்நிதி நடுவிலும் அதன் இருபுறமும் வரிசையாக பிற சந்நிதிகளும் உள்ளன. இதைத் தவிர, இவ்வளாகத்தில் பல சிறிய பீடங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் கனசதுர வடிவ தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளன. பலகாலமாக வழிபட்டு வரும் குருநாதன் சுவாமியைத் தொடர்ந்து 21 பரிவார தெய்வங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றான சுடலைமாடன் சாமியை கல்லால் பீடம் அமைத்து வழிபட்டு வருகின்றனர். முற்காலத்தில் இக்கோயில் மணல் மற்றும் செங்கல் கட்டிடமாக இருந்தது. பின்பு அவை இடிக்கப்பட்டு நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சுடலைமாட சாமி பரிவார தெய்வங்களில் ஒன்றாக இருந்தாலும், மற்ற தெய்வங்களுக்குப் பூசைகள் தொடங்குவதற்கு முன்பு சுடலை மாடனுக்கு பலி கொடுத்து பூசை செய்த பின்பே திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைத் தொடங்குகின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் ஊர் பொதுக் கோயிலாகும். பனையூரைச் சுற்றியுள்ள 21 கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட 5 குடும்பத்திற்கும் இது குல தெய்வமாக உள்ளது. இன்று சுமார் 400 குடும்பங்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அய்யனார் கோயில், காமாட்சி அம்மன் கோயில்
செல்லும் வழி
திருச்சுழியிலிருந்து கமுதி செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் பனையூர் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி நரிக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

திருப்பதி, பனையூர்

திருப்பதி, பனையூர்

திருப்பதி, பனையூர்

திருப்பதி, பனையூர்

காணொலி

திருப்பதி, பனையூர்