Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

போஜன் மாலக் கோயில்

Bhojan Māla Temple

கோயிலின் வேறு பெயர்

மாலக் கோயில்


அமைவிடம்

கோம்பையில் இருந்து உத்தமபாளையம் செல்லும் சாலையில் உள்ள கொசவம்பட்டி அருகே உள்ளது.


மூலவர் பெயர்

போஜன்


ஊர்

கோம்பை

மாவட்டம்

தேனி

பூசைக்காலம்
ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
குலதெய்வ வழிபாட்டின்போதும், பிரதோஷம் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
வழிபாட்டுத்தூணில் புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன.
தல வரலாறு / கதைகள்
கோம்பையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குடியேறும் பொழுது தங்களுடைய குலதெய்வக் கோயிலில் இருந்து ’பிடி மண்’ எடுத்து வந்து, இங்கு வைத்து அதன் மேல் இக்கோயில் எழுப்பபியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இந்த தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர்.
கோயில் அமைப்பு
சிறிய மண்டபம் ஒன்றின் நடுவில் வழிபாட்டுத்தூண் ஒன்று எழுப்பப்பட்டு அதை தெய்வமாக பாவித்து வழிபட்டு வருகின்றனர் .
கூடுதல் விவரங்கள்
சுமார் 5 அடி உயரம் உடைய தூண்கல்லின் நான்கு பக்கங்களும் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கை நகழ்வுகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு போன்றவை கதைச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கோம்பை ரங்கநாதர் கோயில், உத்தமபாளையம் சமனபள்ளி, கருப்புசாமி கோயில், ஞானம்மாள் கோயில் போன்றவை உள்ளன.
செல்லும் வழி
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை செல்லும் சாலையில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
போடிநாயக்கனூர், தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

மு.அகிலன்

மு.அகிலன்