Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில்

Thottarāyar Onnammāl Temple

கோயிலின் வேறு பெயர்

பெருமாள் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ஒன்னம்மாள்


அமைவிடம்

போடிநாயக்கனூர் ஊரிலிருந்து மேல சொக்கநாதபுரம் செல்லும் சாலையில் உள்ளது.


ஊர்

மேலசொக்கநாதபுரம்

மாவட்டம்

தேனி

தலத்தின் சிறப்பு
இக்கோயிலில் மூலவராக கண்ணனும் பாமாவும் உள்ளனர். சிவனுக்கும் சக்திக்கும் தனி சன்னதி உள்ளது.
மூலவர் பெயர்
கண்ணன் மற்றும் பாமா
ஆகமம்
வைணவ ஆகமம்
பூசைக்காலம்
ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மார்கழி மாதம் காப்புக் கட்டி, தை மாதம் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் தேதிகளில் திருவிழா நடத்தப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சுவரோவியம்
குதிரையில் கண்ணன் மற்றும் பாமா அமர்ந்துள்ள காட்சியும், கருடன் மற்றும் அனுமான் சுவரோவியங்களும் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
சிவன், சக்தி, நவக்கிரகம் மற்றும் விநாயகர் சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
விமானம், கருவறை, அர்த்தமண்டபம், மிகப்பெரிய மகா மண்டபம் மற்றும் நுழைவாயிலில் கோபுரமும் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் கருவறையில் கண்ணன் மற்றும் பாமா, நின்ற கோலத்தில் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கிறார். அவருக்குப் பின்னால் பசுமாடு ஒன்று நிற்பது போல சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் விநாயகருக்கு சிறு சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் சிவனுக்கும் சக்திக்கும் தனி சன்னதி உள்ளது. இதே போல் வடக்கு பக்கம் நவகிரகங்களும் பொன்னம்மாளுக்கு தனி சன்னதி கட்டப்பட்டிருக்கிறது. மேலச் சொக்கநாதத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் இக்கோயிலை தங்கள் குலதெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
போடிநாயக்கனூரில் பரமேஸ்வரன் கோயில், பெருமாள் கோயில், சுப்பிரமணியர் கோயில் போன்ற பெரிய கோயில்கள் உள்ளன.
செல்லும் வழி
போடி நாயக்கனூரில் இருந்து திருமலாபுரம் வழியாக மேலச்சொக்கநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
போடிநாயக்கனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
போடிநாயக்கனூர் மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
போடிநாயக்கனூர் தேனி
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்