Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

வெங்கடபெருமாள் கோயில்

Venkata Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

வரதராசப் பெருமாள் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ஸ்ரீதேவி, பூதேவி


மூலவர் பெயர்

வெங்கடபெருமாள்


ஊர்

செட்டிக்குறிச்சி

மாவட்டம்

விருதுநகர்

கோயில் குளம்/ஆறு
திருக்குளம் மற்றும் கிணறு உள்ளது.
ஆகமம்
வைகானசம்
பூசைக்காலம்
இருகால பூசைகள் நடைபெறும்-காலை 06.00- மற்றும் மாலை 4.30.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி போன்ற தினங்களிள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் பூ, பழம், தேங்காய், வாசனை திரவியங்கள், நெய்வேத்தியம், பொங்கல் ஆகியவை படைக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் பல பொது ஆண்டு 13-20 வரையிலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் இக்கோயிலை 'பெருந்துவளியான ராசாதித்தநல்லூரிலுள்ள புரவுவரி விண்ணகர எம்பெருமான் கோயில்' என்று அழைக்கின்றன. இவை இக்கோயிலுக்கு திருவாயில் திருநிலை அமைக்கப்பட்டதையும், கோயிலுக்கு இறையிலியாகயா அளிக்கப்பட்ட நிலங்களின் எல்லைகள் பற்றியும் கூறுகின்றன. பொது ஆண்டு 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் செட்டிகுறிச்சியில் சங்குச்சாமி மடம் அமைக்கப்பட்டதையும், கோயில் வாசல் செய்யப்பட்டதையும், கோயிலுக்கு தானம் அளித்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.
சிற்பங்கள்
ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள், நவகிரகங்கள் மற்றும் கருடன் கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. முகப்புப் பகுதியில் சுதைசிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
இங்கு கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம், கருட மண்டபம் மற்றும் சுற்றுச்சுவருடன் கூடிய அமைப்பு காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
கருவறைக்கு வெளியில், மண்டபத்தில் வலதுபுறம் ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள் மற்றும் நவகிரகங்களின் கற்சிற்பங்கள் பீடத்தின்மேல் காணப்படுகின்றன. கோவிலின் வளாகத்தில் முற்றிலும் கல்லாலான கொடிமரம் காணப்படுகிறது. கொடிமரத்தின் கீழ்ப்பகுதியில் ஆஞ்சநேயர் புடைப்புச்சிற்பமாக காணப்படுகிறார்.

இது பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கருவறை, அரை மண்டபம், மாமண்டபம் போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. இக்கோயில் நாயக்கர் காலத்தில் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இத்திருப்பணியின்போது பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் இடம் மாற்றி வைக்கப்பட்டதினால் வரலாற்றுச் செய்தியை முழுமையாக அறிய முடியவில்லை.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு, விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1, பக்கம் 33-39.
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சிவன் கோயில், செட்டிக்குறிச்சி.
செல்லும் வழி
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பந்தல்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை, பந்தல்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
அருப்புக்கோட்டை
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.