Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குருசாமி கோயில்

Gurusāmi Temple

கோயிலின் வேறு பெயர்

சித்தர் கோயில்


மூலவர் பெயர்

குருசாமி


திருவிழாக்கள் விவரங்கள்

ஆடி மாதம், மகம் நட்சத்திர நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.


ஊர்

கோட்டூர்

மாவட்டம்

விருதுநகர்

வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் பூ, பழம், தேங்காயுடன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
கருவறை,வழிபாட்டு மண்டபம் மட்டும் கொண்ட கட்டுமானம்.
சுருக்கம்
இக்கோயில் திருவிழாக்களின் போது நடை சாத்தப்படுவதே இல்லை. தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டே இருக்கும். இக்கோயில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர் வழிபாட்டில் இருந்துவருகிறது.
கூடுதல் விவரங்கள்
இப்பகுதி மக்கள், தங்கள் உடம்பில் ஏற்படக்கூடிய கட்டிகளைச் சரிசெய்ய இன்றும் இக்கோயிலில் எண்ணெய் வாங்கி கொடுத்து, வழிபாடு செய்து, அந்த எண்ணெயை அந்தக் கட்டியில் இட்டு பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் "புறப்பாடு" எனப்படும் கட்டிநோய்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பயனடைந்தவர்கள், நேர்த்திக்கடனாக முடி காணிக்கையும், அன்னதாமும் செய்து வருகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இக்கோயிலில் வழிபடப்படும் சித்தர், 18 சித்தர்களில் ஒருவராக விளங்கியுள்ளார். Iவர் இப்பகுதி மக்களுக்கு பண்டைய மருத்துவ முறைகளின் மூலம் தீர்வுகள் வழங்கியவர் ஆவார்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
செல்லும் வழி
பாலவநத்தத்திலிருந்து கோட்டூர் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலவநத்தம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பாலவநத்தம்,விருதுநகர்
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.