Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சிவலிங்கம்

Shivalingam

பிற தெய்வத்தின் பெயர்கள்

நந்தி


அமைவிடம்

மேலக்கரந்தை பிரதான சாலையின் ஓரமாக பொதுவெளியில் அமைந்துள்ளது.


காலம்/ ஆட்சியர்

பொது ஆண்டு 10ம் நூற்றாண்டு, பாண்டியர் காலம்.


ஊர்

M.நாகலாபுரம்

மாவட்டம்

விருதுநகர்

கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கல்லாலான சிவலிங்கம் மற்றும் நந்தி மட்டுமே உள்ளன.
தல வரலாறு / கதைகள்
எம்.நாகலாபுரத்தில் 1000 வருடத்திற்கு முன்பு ஒரு சிவன் கோயில் இருந்துள்ளதாகவும், இந்த சிவலிங்கம் அக்கோயிலுக்கு சொந்தமானதாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சுருக்கம்
பொதுவெளியில் சிவலிங்கமும் நந்தியும் மட்டும் காணப்படுகின்றன. சிவலிங்கம் ஒரு பீடத்தின்மேல் வைக்கப்பட்டுள்ளது. கல்லாலான சிவலிங்கம் 2 அடி நீளம்,2 அடி அகலம் கொண்டுள்ளது. லிங்கத்தின் ஆவுடையார் சதுரவடிவில் உள்ளது. லிங்கத்தைச் சுற்றி கருவறையோ மண்டபமோ காணப்படவில்லை. எனினும் முற்காலத்தில் இப்பகுதியில் ஒரு சிவாலயம் இருந்து அழிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இது பிரதான சாலையின் ஓரமாக அமைந்துள்ளதால் இந்த சிவலிங்கத்தை இவ்வூர் மக்களும் வழிப்போக்கர்களும் வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.