Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கண்டமனூர் பெருமாள் கோயில்

Kandamanur Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

ரெங்கநாதப் பெருமாள் கோயில்


அமைவிடம்

கண்டமனூர்


மூலவர் பெயர்

பெருமாள்


ஊர்

கண்டமனூர்

மாவட்டம்

தேனி

பூசைக்காலம்
தினமும் காலை 7.30-9.30, மாலை 5.30-7.30 வரையும், சனிக்கிழமைகளில் காலை 6.15- 10.00, மாலை 5.30-8.40 வரையும் திறந்திருக்கும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா அன்றும், புரட்டாசி சனிக்கிழமைகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பாண்டியர் காலம்.
சுவரோவியம்
இங்கு கருடன், ஆஞ்சநேயர், ஆண்டாள், நாராயணன் மற்றும் லட்சுமி, ராமர் பட்டாபிஷேக காட்சி மற்றும் கஜேந்திர மோட்சம் காட்சி ஆகியவை அண்மைக்காலத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
சிற்பங்கள்
கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், விநாயகர், ஆஞ்சநேயர் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
இக்கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டு, ஜமீன்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டதாக செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை, முன் மண்டபம், சந்நிதிகள் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படும் இந்த பெருமாள் கோயில் கருவறையில், பெருமாள் நின்ற காலத்தில் சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். கருவறையில் விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியின் உலோக உற்சவ சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த வைணவ தலத்தின் வெளி மண்டபத்தில் ஒரு தனி பீடத்தின் மேல் விநாயகர் மற்றும் நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.

கருவறையின் வெளிப்புற சுவர்களில் அலங்கரிக்கப்பட்ட பொய் கோட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்க அனுமானுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட நான்கு கால் மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பாலசுப்ரமணியர் திருக்கோயில், கண்டமனூர் ஜமீன் பங்களா
செல்லும் வழி
மதுரை - தேனி முதன்மைச் சாலையில் இருந்து, க. விலக்கு வழியாக செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்டமனூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
தனியார் விடுதிகள் உள்ளன.
புகைப்படங்கள்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்