Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுவில் வீற்றிருந்த பெருமாள் கோயில்

Naḍuvil Vītṟirundha Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

நடுவில் நின்ற பெருமாள்; வரதராஜ பெருமாள்; ஸ்ரீபூமி, நீளா ஸமேத வீற்றிருந்த பெருமாள் கோயில்.


பிற தெய்வத்தின் பெயர்கள்

வரதராஜ பெருமாள் / வைணவம்


அமைவிடம்

மேல்மங்கலம் கிராமத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலுக்கும் மாயா பாண்டீஸ்வரர் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது.


ஊர்

மேல்மங்கலம்

மாவட்டம்

தேனி

தலத்தின் சிறப்பு
இத்தலத்தில் பெருமாள் வீராசன அமர்வில் அமர்ந்துள்ளார்.
மூலவர் பெயர்
நடுவில் வீற்றிருந்த பெருமாள்
கோயில் குளம்/ஆறு
வராக நதி
ஆகமம்
பஞ்சராத்ர ஆகமம்
பூசைக்காலம்
ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் வைணவ சமயத்தோடு தொடர்புடைய விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
காலம்/ ஆட்சியர்
பிற்காலப் பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் கோயில் கருவறையின் வெளிப்புற சுற்றில் உள்ள ஜகதி, குமுதம் மற்றும் பட்டிகை பகுதிகளில் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் (பொது ஆண்டு 1268-1308) காலத்திலும், முதலாம் சடையவர்மா வீரபாண்டியன் (பொது ஆண்டு 1251-1271) காலத்திலும் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இங்கு காணப்படும் அண்மைக்கால கல்வெட்டு ஒன்று, ' விபவ ௵ (வருஷம்) ஆனி ௴ (மாதம்) 17 தேதி 1-7-1988 ல் நூதன விமானம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது’ என்று கூறுகிறது. இதன் அருகில் உள்ள மற்றொரு அண்மைக்கால கல்வெட்டு ஒன்று ஸ்ரீ பூமி, நீளா, சமேத வீற்றிருந்த பெருமாள் கோயில் 5-6- 2009 மகா கும்பாபிஷேகம் (சம்ப்ரோட்சணம்) மேல்மங்கலம் ஊர் பொதுமக்களால் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
சுவரோவியம்
ராமர் பட்டாபிஷேக சுபரோவியம் காணப்படுகிறது.
சிற்பங்கள்
கோயில் கருவறையில் மூலவரான பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை, நான்கு தூண்களுடைய முன் மண்டபம் மற்றும் ஆறு தூண்களுடைய மகா மண்டபமும் உள்ளது. கருவறையின் மேல் பகுதியில் இரண்டடுக்கு விமானம் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் உள்ள பெருமாள் மோட்சத்திற்குரிய பெருமளாகவும் திருப்பதி பெருமாளுக்கு இணையாகவும் சொல்லப்படுகிறார். இக்கோயில் பெருமாள் வேறு எங்கும் இல்லாத வண்ணம், இங்கு இடது கையில் புஷ்பம் பிடித்தவாறு உள்ளார். கேட்ட வரத்தைத் தரும் ஆகூய வரதனாக உள்ளார் என்று இப்பகுது மக்களால் நம்பப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பள்ளிகொண்ட பெருமாள் கோயில் மற்றும் மாய பாண்டீஸ்வரர் கோயில்
செல்லும் வழி
பெரியகுளத்தில் இருந்து ஜெயமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் வடுகபட்டி ஊருக்கு அடுத்தார் போல் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுளம் ஆண்டிபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
ஆண்டிபட்டி மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பெரியகுளம், தேனி
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

காணொலி

ம.ரேவன்