Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இராஜேந்திர விநாயகர் திருக்கோயில்

Rajendra Vinayagar Temple

கோயிலின் வேறு பெயர்

விநாயகர் கோயில்


அமைவிடம்

பகவதி அம்மன் கோயில் பின்புறம், ஒரு மண்டபம் அருகில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

விநாயகர்


ஊர்

வடுகபட்டி

மாவட்டம்

தேனி

கோயில் குளம்/ஆறு
வராக நதி
பூசைக்காலம்
இரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், விநாயகர் சதுர்த்தி மற்றும் இந்து சமயத்துடன் தொடர்புடைய முக்கியமான விழா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விநாயகருக்கு உகந்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 900 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கோயிலின் முகப்பு பகுதியில் சிவன், பார்வதி, விநாயகர், முருகர், நந்தி, பூதகணங்கள் ஆகியோரின் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்குள் விநாயகரின் வாகனமான மூஞ்சுறு (எலி), நவக்கிரகங்கள் மற்றும் பல நாகர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு / கதைகள்
பல காலம் முன்பு, பாண்டிய நாட்டை முதலாம் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய போது, சோழ நாட்டில் இருந்து இப்பெரிய விநாயகர் சிற்பத்தை, பெரியகுளத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திர சோழீஸ்வரமுடையார் கோயிலில் வைத்து பிரதிஷ்டை செய்வதற்காக வண்டியில் கொண்டுவந்தனராம். வரும்வழியில் வண்டியினுடைய அச்சு உடைந்து, இந்த விநாயகர் சிற்பம் இங்கு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. மீண்டும் விநாயகர் சிற்பத்தை எடுத்து பெரியகுளம் செல்வதற்கு முயலும் பொழுது, விநாயகர் தன்னை அங்கேயே வைத்து ஒரு கோயில் கட்டி வழிபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக இப்பகுதி மக்களிடம் பல காலமாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. பின்னர் இவ்விநாயகர் சிற்பத்தை இராஜேந்திர சோழனின் நினைவாக ’இராஜேந்திர விநாயகர்’ என்ற பெயரில் இவ்வூர் மக்கள் வழிபடத் தொடங்கினர்.
கோயில் அமைப்பு
சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட விமானம், கருவறை மற்றும் முன் மண்டப அமைப்பு காணப்படுகிறது. அம்மண்டபத்தில் நவகிரக சிற்பங்கள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இராஜேந்திர விநாயகர் கோயில் கருவறையில் காணப்படும் விநாயகர் சிற்பம் சுமார் 5 அடி உயரம் கொண்டது. இச்சிற்பம் தேனி மாவட்டத்திலேயே பெரிய விநாயகர் சிற்பமாகக் கருதப்படுகிறது. மேலும் இது சோழர் கால சிற்பக்கலை அம்சத்தை பிரதிபலிக்கும் சிற்பமாகவும் விளங்குகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பகவதி அம்மன் கோயில், மேல்மங்கலத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட இரண்டு பெருமாள் கோயில்கள் மற்றும் மாயா பாண்டீஸ்வரர் கோயில், பெரியகுளத்தில் இராஜேந்திர சோழீஸ்வரம் உடையார் கோயில் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளன.
செல்லும் வழி
பெரியகுளத்தில் இருந்து மேல்மங்கலம் செல்லும் சாலையில் முதல் ஊராக வடுகப்பட்டி அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டிபட்டி, தேனி மற்றும் பெரியகுளம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
ஆண்டிபட்டி மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பெரியகுளம், தேனி
புகைப்படங்கள்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்

மு.அகிலன்