It is located on the banks of the canal west of Seelaiyampatti town.
Village Name
Seelaiyampatti
District
Theni
மூலவர் பெயர்
வேணுகோபால சுவாமி
கோயில் குளம்/ஆறு
சுரபி நதி என அழைக்கப்படும் முல்லையார்
ஆகமம்
வைணவ ஆகமம்
பூசைக்காலம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதேசி மற்றும் வைணவ சமயத்துடன் தொடர்புடைய பிற முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சிற்பங்கள்
விஷ்ணுவின் பத்து அவதார (தசாவதார) சிற்பங்களும் கோயில் சுவர் பகுதியில் காணப்படுகின்றன. கருவறையின் வாயில் பகுதியில் இரண்டு துவாரபாலகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவர்கள் இருவரும் சங்கு, சக்கரம் மற்றும் கதை பிடித்துள்ளனர். கோயிலின் முகப்பு பகுதியில் கிருஷ்ணர், பாமா, ருக்மணி மற்றும் கருடன் ஆகியோரின் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
விமானம், கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் அதைச் சுற்றி மண்டப அமைப்பும் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
வேணுகோபால சுவாமி கோயில், பகவான் கிருஷ்ணருக்காக எடுக்கப்பட்டக் கோயிலாகும். கோயிலின் தொடக்கக் காலத்தில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. பிற்காலத்தில், கருவறையைச் சுற்றி ஒரு மண்டப அமைப்பு கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் விஷ்ணுவின் பத்து அவதார சிற்பங்களும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் சின்னமனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு வைப்புத்தலமாக கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Name of the Chief deity
Venugopala Swami
Temple Pond/River
Mullaiyar (Mullai river), also known as Surabi River
Agama
Vaishnava agama
Worship Timings
One-time Pooja will be held every Saturday.
Festivals details
Special pujas are performed on Vaikunṭha Ēkādaśi and other important days related to Vaishnava religion.
Sculptures
Sculptures of the ten incarnations (dasavatara) of Vishnu are also found on the temple walls. Two Dvarapalakas are found at the entrance of the sanctum sanctorum. Both of them are holding a conch shell, a discus and a club. The facade of the temple has stucco sculptures of Krishna, Bhama, Rukmini and Garuda.
Architecture
There is a vimana, sanctum, arthamandapam and also a mandapa structure around it.
Additional Information
Venugopal Swamy Temple is a temple dedicated to Lord Krishna. In the early days of the temple, only the sanctum sanctorum and the ardhamandapam were built. Later, a mandapa structure was built around the sanctum sanctorum. The ten incarnations of Vishnu are also displayed in this mandapa. It is said that this temple is associate with the Chinnamanur Lakshmi Narayana Perumal Temple.
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்
Details
Dr.C.Manickaraj
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், வீரபாண்டி போன்ற ஊர்களில் சைவ வைணவ கோயில்கள் உள்ளன.
Nearby Monuments
There are Saiva Vaishnava temples in towns like Uttampalayam, Chinnamanur, Markaiyankottai, Kuchanur, Veerapandi.
செல்லும் வழி
சீலையம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மேற்குப் பக்கமாக செல்லும் சாலை வழியாக சென்றால் இக்கோயிலை அடையலாம்.
Directions
You can reach this temple by taking the road to the west from Seelaiyampatti bus stand.