Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பால் வண்ண நாதர் கோயில்

Pālvanna Nāthar Temple

கோயிலின் வேறு பெயர்

சிவன் கோயில்


அமைவிடம்

மயிலாடும்பாறை, பி.எஸ்.ஜே மஹால் அருகில் உள்ளது.


மூலவர் பெயர்

பால் வண்ண நாதர்


ஊர்

மயிலாடும்பாறை

மாவட்டம்

தேனி

தல மரம்
அரசமரம், வில்வ மரம்
கோயில் குளம்/ஆறு
வைகை ஆறு
திருவிழாக்கள் விவரங்கள்
நவராத்திரி பண்டிகையின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டியர் காலம்.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு ஒன்று கோயிலின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் வரிசைநாட்டு ஓரோமீஸ்வரம் உடைய நாயனாருக்கு தொண்டைமானார் அணுகிகள் தினந்தோறும் பூசைகள் செய்ய நில தானம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இத்தானத்தை வழங்கியவர் தொண்டைமான் மனைவியான புன்னன் தேவாண்டாள் எனக் கூறப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் நந்தி சிற்பம் காணப்படுகிறது. கோயிலின் முகப்பு மற்றும் விமான பகுதியில் சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நந்தி, பூதகணங்கள், பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி போன்ற பல சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
ஓரடுக்கு விமானம், கருவறை, முன் மண்டப மற்றும் மகா மண்டபம் உள்ளன.
சுருக்கம்
பால் வண்ண நாதர் கோயிலில் சிவபெருமான் முதன்மையானக் கடவுளாவார். கோயில் கருவறையில் சிவலிங்கம், விநாயகர் மற்றும் நாகர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டு, பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு ஒன்று கோயிலின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஓரோமீஸ்வரம் உடைய நாயனாருக்கு அளிக்கப்பட்ட நிலதானங்கள் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு புதுப்பிக்கப்பட்ட கோயில் கட்டிடமே காணப்படுகிறது, எனினும் இந்த வழிபாட்டுத்தலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கடமலைக்குண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
செல்லும் வழி
மயிலாடும்பாறை - மூலக்கடை சாலையில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மயிலாடும்பாறை பேருந்து நிலையம்.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி தொடர்வண்டி நிலையம்.
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்.
தங்கும் வசதி
மயிலாடும்பாறையில் தங்கும் விடுதி உள்ளது.
புகைப்படங்கள்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

மூ.செல்வம்

காணொலி

மூ.செல்வம்