Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில்

Padiṉeṭṭāmpaḍi Karupannaswāmi Temple

அமைவிடம்

காமாட்சி அம்மன் கோடிலில் இருந்து கெங்குவார்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

பதினெட்டாம்படி கருப்பண சுவாமி, மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் கோயிலின் முன்னோடியாகவும், காவல் தெய்வமாகவும், இப்பகுதி மக்களின் செல்வாக்கு பெற்ற தெய்வமாகவும் விளங்குகிறது.


மூலவர் பெயர்

கருப்பசாமி


ஊர்

தேவதானப்பட்டி

மாவட்டம்

தேனி

தல மரம்
பெத்த கருவாச்சி
பூசைக்காலம்
மூன்று கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதம் மற்றும் சிவராத்திரி நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடன் நேந்து விடுவது, கால்நடைகளை பலியிடுவது, கருப்புக்கு படையல் வைப்பது போன்ற வழிபாட்டுச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சுவரோவியம்
சன்னதியின் சுவற்றில் கருப்புசாமி தன் நாயுடன் நிற்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
சோன முத்தையா,லாட சன்னாசி போன்ற சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
இங்கு கருவறை, முன் மண்டபம் மற்றும் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் கருப்பணசாமி முதன்மை தெய்வமாக விளங்குகிறார். கருப்பணசாமி கருவறையின் முன்பு, ஐயப்பன் கோயிலில் உள்ளது போல் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோயிலுக்கு பதினெட்டாம் படி கருப்பணசாமி என்ற பெயர் வந்துள்ளது. கோயிலின் முன்மண்டபத்தின் வெளிப்புற சுவர்களில் இருபுறங்களிலும் குதிரையின் மேல் கருப்பணசாமி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. குதிரையின் அருகில் நாயின் உருவமும் காட்டப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் கோயில்
செல்லும் வழி
காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து கெங்குவார்பட்டி செல்லும் சாலையில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வத்தலக்குண்டு மற்றும் பெரியகுளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திண்டுக்கல் மதுரை மற்றும் தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
வத்தலக்குண்டு மற்றும் பெரியகுளம்
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்