Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கைலாசநாதர் கோயில்

Kailasanathar Temple

அமைவிடம்

இக்கோயில் பொய்கையின் அருகில் ஊரின் முகப்பில் உள்ளது


மூலவர் பெயர்

கைலாசநாதர்


தல மரம்

வில்வம்


ஊர்

திடியன்

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
பொய்கை
பூசைக்காலம்
ஆறுகால பூசை நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் மற்றும் பழங்கள் படைக்கப்பட்டு, அபிசேகம் செய்யப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் சுமார் 10 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 4 நந்தி மண்டபத்திலும், 5 கல்யாண மண்டபத்திலும் மற்றொன்று அர்த்த மண்டபச் சுவரிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளன. இக்கோயில் மண்டபங்கள் மற்றும் தூண்கள் அமைக்கப் பல்வேறு ஆட்கள் கொடுத்த கொடைகளைப் பற்றி அவை கூறுகின்றன.
கோயில் அமைப்பு
கோபுரம், கருவறை, சந்நிதிகள் மற்றும் தேவகோட்ட சிற்பங்கள் ஆகியவை உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இந்தக் கோயில் வளாகம் பெரியதாக உள்ளது. இங்கு மூலவர் சந்நிதி, அம்மன் சந்நிதி, நந்தி மண்டபம், கல்யாண மண்டபம் இன்னபிற அமைப்புகளும் உள்ளன. இம்மண்டபங்களின் தூண்களில் சிற்பங்களுடன் கூடிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறையின் மேல் இருதள விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிச்சுவரில் துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலின் சுவற்றில் கௌளி சின்னம் காணப்படுகிறது. இது செல்லம்பட்டி வட்டாரத்தில் உள்ள சைவக் கோயில்களில் மிகப் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான கோயிலாகக் கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
Madurai mavatta kalvettukal part2, pg -156-165
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திடியன் மலை, முத்தையா கோயில் உள்ளது.
செல்லும் வழி
செல்லம்பட்டியிலிருந்து இடப்புறம் திடியன் சென்றால் ஊரின் முகப்பில் கோயில் உண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செல்லம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி
புகைப்படங்கள்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்

விஜயகுமார்