சிவனும் தாயாரும் நந்தியின் மேல் அமர்ந்த கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கின்றனர்.
மூலவர் பெயர்
சிவன், பார்வதி, விஷ்ணு
ஆகமம்
காமிகாகமம்
பூசைக்காலம்
காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மகா சிவராத்திரி இங்குச் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் திருமணத்திற்காகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், மன வலிமை வேண்டியும் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 800 ஆண்டுகள் பழைமையான கோயில்
தல வரலாறு / கதைகள்
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகோசமங்கை என்ற ஊரில் இருந்து இரண்டு குடும்பங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தங்கள் குல தெய்வமான அழகர்கோயில் பெருமாளைத் தரிசிக்க வந்தனர். வரும் வழியில் விராதனூரில் ஓய்வெடுத்தனர். அங்குள்ள ஆலமரத்தில் தங்கள் குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்தனர். எழுந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை. குழந்தை மரத்தில் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட அவர்கள், “இறைவா! குழந்தையைக் காப்பாற்றுங்கள்” எனக் கூறிக் கதறி அழுதனர். அப்போது இறைவன் அந்த ஊரில் தனக்கு கோயில் எழுப்பி வழிபடச் சொன்னார். இறைவனின் கட்டளைப்படி, நந்தியின் சிலையை நிறுவிக் கோயில் கட்டி வழிபட்டனர். குழந்தையைக் காணாமல் கதறி அழுத போது உதவியதால், இவ்விறைவனுக்கு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரர் என்று பெயர் வந்தது.
விராதனூர் என்ற இவ்வூரைப் பற்றி ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. இராமாயண இதிகாச காலத்தில் இந்திரனின் நடன சபையிலே ரம்பையின் நடனம் நடைபெற்ற போது தும்புருவன் எனும் கந்தருவன் ரம்பையின் நாட்டிய கலைமீது நாட்டம் கொள்ளாமல் ரம்பையின் மீது ஆசை கொண்டதனால் இந்திரன் கோபமுற்றான். எனவே துன்புருவன் விராட ராட்சதனாக அவதரிக்க வேண்டும் என சாபம் கொடுத்தான். தும்புருவனும் அவ்வாறே அடர்ந்த வனம் நிறைந்த இப்பகுதியில் (விராதையம்பதி) அவதரித்து அதை ஆண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
பெரும்பாலான கோயில்களின் நடுப்பகுதியில் மூலவர் சந்நிதி அமைக்கப்படும். ஆனால் இங்கு அது வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. தனி மண்டபத்தில் நந்தியும், கருவறையின் வலப்புறம் பத்திரகாளியும், இடப்புறம் வீரபத்திரரும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், முருகனும் உள்ளனர். அக்னிமூலத்தின் தென்கிழக்கு மூலையில் முத்துக்கருப்பண்ணசாமி, ராக்கை, சப்பாணி, காவல்கருப்பு, முனியாண்டி முதலிய கிராமத் தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
இவ்வாலயத்தில் இரண்டாவது நிலையில் சரவணப்பெருமாள் அமர்ந்து அருள் பாலிக்கிறார். எனவே இது சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் தலமாக உள்ளது.
Significance of the temple
Shiva and Thayar (Parvati) are depicted as the main deities (moolavar) seated on Nandi in the sanctum.
Name of the Chief deity
Shiva, Parvati, Vishnu
Agama
Kamikagama
Worship Timings
Worship is conducted from 7:00 AM to 8:00 AM, and from 6:00 PM to 8:00 PM.
Festivals details
Maha Shivaratri is celebrated here with special significance.
Rituals of worship / Methods
Devotees worship here seeking blessings for marriage, childbearing, and mental strength.
Architecture
In most temples, the sanctum sanctorum of the main deity is located at the center. However, here it is situated in the northwest corner. In a separate hall, Nandi is present; on the right side of the sanctum is Bhadrakali, on the left is Veerabhadra; in the arthamandapam are Vinayaka and Murugan. In the southeast corner of the Agni-moolam are the shrines of village deities such as Muthukaruppan, Rakkai, Sappani, Kaval Karuppu, and Muniyandi.
Additional Information
In this shrine, Saravanapperumal is seated in the second sanctum, granting blessings. Therefore, this temple serves as a site that unites both Shaivism and Vaishnavism.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அருள்மிகு மரகதவல்லி-முக்தீஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளம்.