It is also near the Kanmai Karaikkum Karuppanna Swami Temple.
Name of the Chief deity
Siva
Temple Pond/River
Well
Village Name
Koodakovil
District
Madurai
பூசைக்காலம்
தினசரி பூசைகள் நடைபெறுவதில்லை ஆனால் உள்ளூர் மக்கள் விழிபட்டு செல்கின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியிலும், தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களையும் கொண்ட பொது ஆண்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. கோயிலின் அர்த்தமண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள இக்கல்வெட்டில்:
1- ”ஸ்வஸ்திஸ்ரீ நர
2-லோக
3- ன் கௌரி
4- ஸி ற
5- வாஸ” என்று எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமையாக இல்லை. சிதைந்துள்ளது. நரலோகன், கௌரி ஆகிய பெயர்கள் உள்ளன. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கருவறையின் வெளிப்புற சுவர்களில் உள்ள கூடுகளில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தில் சிங்கத்தின் கற்சிற்பமும் காணப்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயிலில் கருவறை மற்றும் முன் மண்டப அமைப்புகள் உள்ளன. கருவறையின் வெளிப்புற சுவற்றில் உள்ள தேவகோட்டங்களில் இறை உருவ சிற்பங்கள் காணப்படவில்லை. கோயில் தற்போது சிதைந்த நிலையில் இருப்பதால் விமான அடுக்குகளும் காணப்படவில்லை.
Worship Timings
Daily poojas are not conducted, but the local people visit vigilantly.
Inscription / Copper
In this temple, there is an inscription from the 13th century CE in both Tamil and Sanskrit languages, using Tamil and Grantha scripts. On the east wall of the temple’s Artha Mandapa, the inscription reads:1- "Swasthisri Nara
2- Loka
3- n Gauri
4- Si ṟa
5- Vasa". The inscription is incomplete and damaged. The names Naralogan and Gauri are mentioned. This inscription is believed to date back to the 13th century CE.
Sculptures
Sculptures are seen in the niches on the outer walls of the sanctum. In the temple complex, a stone sculpture of a lion is also visible.
Architecture
The temple has a sanctum and an entrance hall. In the outer walls of the sanctum, deity sculptures are not seen in the niches. Since the temple is currently in a dilapidated state, the vimana tiers are also not visible.
தகவல்
முனைவர் ஆத்மநாதன்
Details
Dr. B. Athmanathan
குறிப்புகள்
இந்த மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளும் நடுவண் அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் 267/1964 & 268/1964 இல் வெளிவந்துள்ளன. ஆதாரம் : தினகரன் நாளிதழ், 10, 2023.
Reference
These two aforementioned inscriptions were published in the Annual Report of the Department of Archaeology, Government of Tamil Nadu, as 267/1964 & 268/1964. Source: Dinakaran Newspaper, 10, 2023.