கோயிலின் வேறு பெயர்
சப்த கன்னிகள் கோயில்
மூலவர் பெயர்
சப்த கன்னிகள்
கோயில் குளம்/ஆறு
வைகை நதி
ஊர்
காவனூர்
மாவட்டம்
மதுரை
கோயில் நிர்வாகிகள் கலந்துரையாடி திருவிழா எம்மாதத்தில் நடைபெற வேண்டும் என்பதை முடிவு செய்வர்.
விளக்கு பூசை நடைபெறுகிறது.
திறந்தவெளி கோயில் அமைப்பு/கூரையில்லா கோயில்.
இது கன்னிமார் அல்லது சப்த கன்னிகள் என்று அழைக்கப்படும் ஏழு பெண் தெய்வங்களுக்காக அமைக்கப்பெற்ற கோயிலாகும்.சோழர் ஆட்சி காலத்தில் சப்த கன்னியர் வழிபாடு இருந்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் காவல் தெய்வங்களின் கோயில்களில் சப்த கன்னியர் சந்நிதியும் அமைந்திருக்கும். அந்த வகையில் காவனூர் கிராமத்தில் கருப்புசாமியின் காவலுடன், இந்த கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு மேடை போன்ற அமைப்பின் மேல் ஏழு கன்னிமார்களும் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். இம்மேடையின் கீழ் இடப்புறம் விநாயகர் சிற்பம் அமைந்துள்ளது. மேடையின் வலப்புறம் முருகர் சிற்பம் காணப்படுகிறது. இந்த தெய்வங்களை பார்த்தவாறு நந்தி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் இக்கோயிலை எழுப்பி திருவிழா நடத்தி வருகின்றனர்.
கன்னிமார் கோயில் என்பது பெரும்பாலும் விளைநிலங்கள் மற்றும் ஆறு பகுதிகளில் அமைய பெற்றிருக்கும். இந்த ஏழு கன்னிமார்களும் தீமையை அழிக்க வெவ்வேறு காலக்கட்டங்களில் பிறந்தவர்களாக கருதப்படுகின்றனர். மக்கள் தங்கள் விவசாயம் செழிப்பதற்கும், வாழ்வில் நலன் பெறுவதற்கும், தீமையிலிருந்து விடுபடுவதற்கும் கன்னிமார் தெய்வங்களை வழிபடுகின்றனர்.
முனைவர் துர்கா தேவி
முருகன் கோயில், விநாயகர் கோயில், கருப்பசாமி கோயில்
காவனூர் பேருந்து நிலையம்
மதுரை ரயில் நிலையம்
மதுரை விமான நிலையம்