Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இரங்கராஜப் பெருமாள் கோயில்

Rangarāja Perumal temple

அமைவிடம்

கிருதமால் ஆற்றங்கரையில் நாகமலை அடிவாரத்தில் உள்ளது.


மூலவர் பெயர்

இரங்கராஜப் பெருமாள்


திருவிழாக்கள் விவரங்கள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலில் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. மாதத்தில் ஐந்தாவது சனிக்கிழமை அன்று கோயில் அருகே திரளும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்குத் ததியாராதனை வழங்கப்படுகிறது. மார்கழி உற்சவத்தின்போது நாள்தோறும் காலையில் திருப்பாவைப் பாராயணத்திற்குப் பிறகு குடியிருப்பாளர்களுக்குப் பொங்கல் வழங்கப்படுகிறது.


ஊர்

துவரிமான்

மாவட்டம்

மதுரை

வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஸ்ரீ ஜயந்தியின் போது ஹோமம் மற்றும் திருமஞ்சனத்தைத் (அபிஷேகம்) தொடர்ந்து, இறைவன் ஊர்வலமாகச் செல்வது இங்கு வழக்கம். இராம நவமியையொட்டி, கோயிலில் வேத பண்டிதர்கள் இராமாயணப் பாராயணத்துடன் யாகம் நடத்துவர்.
கல்வெட்டு / செப்பேடு
இங்குள்ள கல்வெட்டில் பொது ஆண்டு 1941 மாதம் விஷு வருஷம் ஆனி மாதம் சுமார் 16000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து பிருந்தாவனம் கட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
தல வரலாறு / கதைகள்
இக்கோயில் அருகில் வசித்துவரும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு துவாரகாவிலிருந்து வந்து இங்குக் குடியேறியதாகவும், பஞ்சம் வந்தபோது கடவுள் ஒரு ஊர்வாசியின் கனவில் தோன்றிப் பெருமாள் கோயிலைக் கட்டச் சொன்னதாகவும் இவ்வூர்ப் பெரியவர் கூறுகிறார்.
கூடுதல் விவரங்கள்
கோயில் கருவறையில் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் இரங்கராஜ பெருமாள் காட்சி அளிக்கிறார். கோயில் நுழைவாயில் முகப்பில் தெய்வ உருவ சுதை சிற்பம் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இக்கோயிலுக்குச் சற்று அருகில், ஸ்ரீ ரங்கநாத சடகோப யதீந்திர மகா தேசிகரின் 40ஆவது ஜீயர் பிருந்தாவனம் உள்ளது. சோழவந்தான் ஜனக நாராயணப் பெருமாள் கோயில் மற்றும் குருவித்துறை ரத வல்லபப் பெருமாள் (குரு) கோயிலும் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருவேடகம் / சோழவந்தான் நோக்கிப் பத்து நிமிடத்துக்கொரு பேருந்து புறப்பட்டுச் செல்கிறது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரைச் சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
சோழவந்தான் பகுதியில் உள்ளது
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன், முத்துப்பாண்டி

முனைவர் ஆத்மநாதன், முத்துப்பாண்டி

முனைவர் ஆத்மநாதன், முத்துப்பாண்டி