Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஊர்க்காவலன் சேவுகப்பெருமாள் கோயில்

Oorkāvalan Sevuga Perumal Temple

அமைவிடம்

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணிக் கரையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலுக்கும் இந்தக் கோயிலுக்கும் தனித்துவம் வாய்ந்த ஒற்றுமை இருப்பதாகச் சோளங்குருணி ஊர்மக்கள் கூறுகின்றனர். திருவிழாவின் போது புராண வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கம்புணரி சேவுகப்பெருமாளே அருளாட்சி தருவதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.


மூலவர் பெயர்

சேவுகப் பெருமாள்


ஊர்

சோளங்குருணி

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
கோயில் குளம்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்குப் பக்தர்கள் நாடகங்கள் நடத்தித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகிறார்கள். இதில் திருவிழாவையொட்டிக் கோயில் நிர்வாகத்தின் கீழ் 2 நாட்கள் நாடகம் நடத்தப்படுகிறது. மற்றும் 9 நாட்கள் பக்தர்களின் நேர்த்திக்கடன் நாடகம் நடத்துவதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 11 நாட்கள் தொடர்ந்து விடிய விடிய நாடகம் நடக்கிறது. சோளங்குருணி மக்கள் மட்டுமல்லாது வலையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி உள்ளிட்ட சோளங்குருணி சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கு மேற்பட்ட ஊர்மக்கள் நாடகத்தைக் கண்டுகளிக்கிறார்கள்.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ்க் கல்வெட்டு இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபுறம் 9 வரிகள் தமிழ் எழுத்துப் பொறிப்பும், மறுபுறம் ஒரு பெண்ணின் உருவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு
கோயில் விமானம், கோபுரம் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோளங்குருணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்