Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

முத்தாலம்மன் கோயில்

Muthālamman Temple

அமைவிடம்

மாத்தூர் சாவடி அருகே அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

முத்தாலம்மன் கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆனால் முத்தாலம்மன் சிலை கோயிலில் நிறுவப்படாது. முத்தாலம்மனின் பீடம் மட்டுமே கோயிலில் காணப்படும். மக்கள் அனைவரும் அந்த பீடத்தையே வருடம் முழுவதும் வழிபடுவர். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழாவை நடத்துவதற்கான நாள் குறித்த அன்று முதல், முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு கோயிலில் நிறுவப்படுகிறது.


மூலவர் பெயர்

முத்தாலம்மன்


ஊர்

மாத்தூர்

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
மாத்தூர் கண்மாய்
திருவிழாக்கள் விவரங்கள்

ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக கலந்து முடிவெடுத்து திருவிழா நடைபெறும் நாளை முடிவு செய்கின்றனர். இக்கோயில் திருவிழா பொதுவாக பங்குனி மாதம் இரண்டு நாட்கள் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமையில் விளக்கு பூசையுடன் பொங்கல் வைத்து வழிபடுவர்.

சிற்பங்கள்
முத்தாலம்மன் சிலை திருவிழாவின் போது மட்டும் நிறுவப்படுகிறது.
கோயில் அமைப்பு

ஊர் மந்தையில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் பீடம் மட்டும் காணப்படுகிறது. மண்டபத்தின் மேல் பகுதியில் அம்மன் சிற்பங்கள், பூதகிகள், சிம்மங்கள் மற்றும் பிற உருவ சிற்பங்களைக் கொண்ட கோயில் விமானம் போன்ற அமைப்பு உள்ளது.

கூடுதல் விவரங்கள்

முத்தாலம்மன் என்பது ஊர் பொது தெய்வமாக கருதப்படுகிறது. சில கிராமங்களில் முத்தாலம்மன் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. சில இடங்களில் முத்தாலம்மன் திருவிழாவின் போது முளைப்பாரி சுமக்கப்படுகிறது. ஆனால், மாத்தூர் கிராமத்தில் ஒரு நாள் திருவிழாவுடன் மாவிளக்கு மற்றும் ஆயிரங்கண் தீச்சட்டி எடுப்பு நடைபெறுகிறது. திருவிழா அன்று செய்யப்படும் முத்தாலம்மன் சிலை பச்சை குடிசைக்குள் வைக்கப்படுகிறது. அன்று அம்மனுக்காக வள்ளி திருமணம் நாடகம் நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ஹரிச்சந்திரன் நாடகம் நடைபெறுகிறது. விழாவின் பொழுது கும்மியடித்து தானானா கொட்டும் வழக்கமும் உள்ளது. முத்தாலம்மன் திருவிழாவை புல்லுசேரி, செட்டிவெள்ளம் மற்றும் காலனி போன்ற மூன்று ஊர்களும் சேர்ந்து நடத்துவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தல வரலாறு / கதைகள்

முத்தாலம்மனுக்கென பல கதைகளும் பலதரப்பட்ட வரலாறும் உள்ள போதிலும், அனைத்திலும் 'அன்றே பிறந்து அன்றே அழியும் அம்மன்' என்ற மைய கருத்தே காணப்படுகிறது.

தகவல்

முனைவர் துர்கா தேவி

செல்லும் வழி

மாத்தூர் கிராமத்தின் மையப் பகுதியில் சாவடி அருகே முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாத்தூர் பேருந்து நிலையம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

மாத்தூர் ரயில் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

மாத்தூர் விமான நிலையம்

புகைப்படங்கள்

ஜென்சி

ஜென்சி

கேட்பொலி

ஜென்சி