The self-manifested deity has been worshipped as Rama.
Name of the Chief deity
Alagar
Worship Timings
Daily worship is conducted in the morning and evening.
Village Name
Kavalapatti
District
Dindigul
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமையிலும் மார்கழிப் பொங்கல் அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
சலகெருது’ (சலுகை எருது) எனப்படும் கோயில்காளைக்கு, வழிபாட்டின்போது வீடுதோறும் உணவளித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறும். கோயிலுக்குறிய சலுகை எருது இறந்துவிட்டால் அதற்குறிய சடங்குகள் செய்யப்பட்டு கோயிலுகுறிய இடத்தில் புதைக்கப்படுகிறது. சலுகை எருதின் புதைவிடமும் பக்தர்களால் வழிபடப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
சில காலம் முன்பு, ஒரு பெண்ணின் வீட்டில் புற்று ஒன்று தினமும் வளர்ந்து வந்ததாகவும் அதனை அப்பெண் தினமும் சுத்தம் செய்து அகற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு புரட்டாசி மாதத்தில் ஒரு நாள், அந்தப் புற்றைச் சுத்தம் செய்து அகற்றும்போது அவ்விடத்தில் இரத்தம் வந்ததைப் பார்த்த அப்பெண் அந்த இடத்தை ஒரு கோயிலாகப் போற்றி வழிபாடு செய்து வந்தார். புற்றும் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் வளர்வது நின்று விட்டது. அப்பெண் தனக்குப்பின் அந்தக் கோயிலையும் இடத்தையும் ஊர்ப் பொதுவிற்குக் கொடுத்து விட்டார் என்ற செவிவழி செய்தி இப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
இச்சிறு கோயிலில் நுழைவாயிலில் முகப்பு வளைவும், நீளமான வெளி மண்டபமும், முன்மண்டபமும், கருவறை அமைப்பும் காணப்படுகிறது. கருவறையைச் சுற்றி திருச்சுற்று அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
புரட்டாசி 1ஆம் தேதியிலிருந்து ஐப்பசி 1ஆம் தேதி வரை இக்கோயிலுக்குரிய குடும்பத்தினர் அசைவ உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்கின்றனர். புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும், அம்மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று சாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. இவ்வூர்வலத்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இக்கோயிலில் மாவிளக்கு போட்டு வழிபடும் பழக்கமும் உள்ளது.
Festivals details
Worship is conducted throughout the month of Purattasi. In particular, special worship takes place on Purattasi Saturdays and on the day of Margazhi Pongal.
Rituals of worship / Methods
For the temple bullock called “Salageruthu” (Salugai Eruthu), during worship, rituals such as offering food at each house, taking sprouted grains, lighting flour lamps, and preparing Pongal are performed. If the temple bullock dies, the associated rituals are conducted, and it is buried at a designated place in the temple. The burial site of the Salugai Eruthu is also worshipped by the devotees.
Architecture
In this small temple, the entrance has a curved façade, and there is a long outer hall, a front hall, and a sanctum. A circumambulatory path surrounds the sanctum.
Additional Information
From the 1st of Purattasi to the 1st of Aippasi, the family members associated with this temple observe a fast without eating non-vegetarian food. Special worship is conducted on all Saturdays during the month of Purattasi. Additionally, on the last Saturday of the month, a procession of the deity takes place, in which all the villagers participate. There is also a tradition of worshipping the deity by offering flour lamps in this temple.