Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்

Angāla Parameswari Amman Temple

கோயிலின் வேறு பெயர்

அங்காளம்மன்


பிற தெய்வத்தின் பெயர்கள்

விலங்குக்காரன், பெரியசாமி, பேச்சியம்மன், தங்கச்சி சாமி


தலத்தின் சிறப்பு

இந்த ஆலயத்தில் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு முதல் மரியாதை செய்வது தலத்தின் சிறப்பாகும்.


ஊர்

காமாட்சிபுரம்

மாவட்டம்

திண்டுக்கல்

மூலவர் பெயர்
அங்காளபரமேஸ்வரி
தல மரம்
வேம்பு
பூசைக்காலம்

தினமும் காலை மற்றும் மாலை வழிபாடுகள் நடைபெறும்.

திருவிழாக்கள் விவரங்கள்

பங்குனி மாதம் வளர்பிறை நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்

கோயில் கொடை நாளன்று முளைப்பாரி வளர்த்து, அத்துடன் ஊரை சுற்றி ஊர்வலம் வருகின்றனர். இதைத்தவிர தனி பானைகளில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

காலம்/ ஆட்சியர்
சுமார் 70 ஆண்டுகள் பழமையான தலம்.
கல்வெட்டு / செப்பேடு

இல்லை

சிற்பங்கள்
கோயிலில் உள்ள தனி சந்நிதிகளில் விலங்குக்காரன், வீரபத்திரன், பெரியசாமி, பேச்சியம்மன் மற்றும் சப்த கன்னியர் ஆகிய தெய்வங்களுக்கு சுதை சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன், பிழைப்பிற்காக இடம்பெயர்ந்து வந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் வழிபாட்டு தெய்வங்களான அங்காள பரமேஸ்வரி, பெரியசாமி, விலங்குக்காரன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் பிடி மண்ணை எடுத்து வந்து இக்கோயிலை அமைத்ததாக சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பு

முதன்மை தெய்வமான அங்காளபரமேஸ்வரிக்கு கருவறை மற்றும் முன்மண்டபத்துடன் கூடிய சந்நிதி உள்ளது. இதைத்தவிர பரிவார தெய்வங்களுக்கு தனி சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்கள்

அங்காளபரமேஸ்வரி சந்நிதியின் நுழைவாயில் முகப்பு பகுதியில் சிங்கத்தின் மேல் அமர்ந்த தேவியின் சுதை சிற்பம் காணப்படுகிறது. அங்காளபரமேஸ்வரி அம்மன் குறிப்பிட்ட சமூக மக்களின் குல தெய்வமாக உள்ளது.

தகவல்

முனைவர் முத்தையா

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்

பாதாள செம்பு முருகன் திருக்கோயில்

செல்லும் வழி

ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கருப்பிமடம் செல்லும் சாலையில் இராமலிங்கம் பட்டி கிராமம் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ரெட்டியார்சத்திரம் பேருந்து நிலையம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

அக்கரைப்பட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மாவட்ட விமான நிலையம்

தங்கும் வசதி
தங்கும் வசதி இல்லை
புகைப்படங்கள்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்

சி.டிக்ஸன்