Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடன கோபால நாயகி சுவாமி கோயில்

Sri Natana Gopala Nayaki Swamigal Temple

தலத்தின் சிறப்பு

பொது ஆண்டு 1843 ஆம் ஆண்டு பிறந்த ஒருவர், ஆன்மீகத்தின் மீது கொண்ட அளப்பரிய அன்பினால், தன்னை முழுமனதாக ஆன்மீகத்தில் இணைத்துக் கொண்டதால் அவருக்கு இந்த கோயில் அமைக்கப்பட்டதாக பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.


மூலவர் பெயர்

ஶ்ரீமத் நடனகோபால நாயகி


திருவிழாக்கள் விவரங்கள்

ஶ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை கடைப்பிடிக்கும் வகையில், அவரது நியதிப்படியே, பாடல்களைப் பாடியவாறு, நடனம் ஆடிக் கொண்டே ஆலயத்தை சுற்றி வந்து, ஆண்டுதோறும் சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.


ஊர்

காதக்கிணறு

மாவட்டம்

மதுரை

கல்வெட்டு / செப்பேடு
1914 
சிற்பங்கள்
ஶ்ரீமத் நடன கோபால நாயகி சிற்பம் கோயில் கருவறையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியின் உலோக சிற்பங்கள் வழிபடப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
காதக்கிணறு கிராமத்தில் ஶ்ரீமத் நடன கோபால நாயகி அவரது சமாதி ஆலயமானது அமைந்துள்ளது. ஶ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் பொது ஆண்டு 1843ல் பிறந்து, பொது ஆண்டு 1914ல் மறைந்ததாக சொல்லப்படுகிறது. இவரது இயர் பெயர் இராமபத்ரன் என்பதாகும். இவர் சிறுவயதிலேயே தன் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பரங்குன்றத்தில் ஒரு துறவியைப்போல் பல காலம் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார் என சொல்லப்படுகிறது. இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட அன்பால் தன்னை முழுமனதாக தியானத்திலும் கடவுள் சேவையிலும் ஈடுபடுத்தி கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

பின்னர், அவர் தன் தியான சக்தியின் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தி பல முக்கிய ஆன்மீக அடிகளார்களை வியக்க வைத்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் பல பட்டப் பெயர்களை பெற்றார். குறிப்பாக, அவரின் ஆன்மீக ஞானத்தைக் கண்ட ஸ்ரீரங்கத்தின் ஜீயர் சுவாமிகள் அவருக்கு நடன கோபால நாயகி என்ற பெயர் சூட்டினார். புடவையும், கொண்டையும் அணிந்தபடி தனது ஆன்மீக பயணத்தை இவர் மேற்கொண்டார்.

பின்னர், தனது வாழ்நாள் முடியவுள்ளதை அறிந்த அவர், தனக்கான சமாதியை அழகர்மலை கோயில் அருகே அமைந்துள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் எழுப்பும்படி தனது சீடர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவருக்காக அமைக்கப்பட்ட பிருந்தாவனம் என்னும் சமாதியில் இரண்டு வருடம் கழித்து, 8 ஜனவரி 1914ல் அன்று, சமாதிக்குள் சென்று, தன்னை இறைவனோடு சேர்த்துக்கொண்டு ஜீவ சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

பொது ஆண்டு 1935ல் இவ்விடத்தில் பிருந்தாவனம் கோயில் கட்டப்பட்டு 1941-ல் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக அறியப்படுகிறது. பொது ஆண்டு 1998-ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் அமைப்பு
ஶ்ரீமத் நடனகோபால நாயகி ஆலயத்தில் பிருந்தாவனம் கோயில் மற்றும் கிருஷ்ணர் கோயில் என இரு சந்நிதிகள் அமைந்துள்ளன.
தகவல்

முனைவர் துர்கா தேவி

செல்லும் வழி
காதக்கிணறு பகுதியில் அழகர்கோயில் செல்லும் சாலையின் முன்புறமாக அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காதக்கிணறு பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
காதக்கிணறு, புதூர்
புகைப்படங்கள்

முனைவர். தெ. துர்கா தேவி

முனைவர். தெ. துர்கா தேவி